Breaking News

மெல்போர்னில் அதிகரிக்கும் புதிய தொற்று : விக்டோரியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி

New infection on the rise in Melbourne, Corona confirmed for 6 more in Victoria

புதிதாக தொற்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களோடு தொடர்புடையவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், தொற்று பரவும் அபாயம் உள்ள இடங்களை பட்டியலிட்டும் மெல்போர்ன் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புதிதாக தொற்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அந்த வகையில் இரண்டு நாட்களில் 11 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

New infection on the rise in Melbourne, Corona confirmed for 6 more in Victoria.Whittlesea நகரத்தில் ஏற்கனவே தொற்று பாதித்தவர்கள் மூலமாகவே தற்போது புதிய கிளஸ்டர் உருவாகியுள்ளது. அந்நாட்டு சுகாதாரத்துறை 10 புதிய பாதிப்புகள் பதிவாகியிருந்தை தெரிவித்திருந்த நிலையில் தற்காலிக பிரீமியர் James Merlino புதன்கிழமை காலை ஒருவருக்கு தொற்று உறுதியானதை சேர்த்து 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று பாதித்தவர்களின் மூலம் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக கூறினார். தொற்று பரவல் தொடர்பை கண்டறியும் குழு இவர்களோடு தொடர்பில் இருந்த 301 பேரை பட்டியலிட்டு உள்ளனர். அவர்களில் 80 பேருக்கு இதுவரை நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது.

தொற்று பரவும் அபாயம் உள்ள இடங்கள் என அறிவித்த இடங்களில் இருந்து புதிய பாதிப்புகள் பதிவாகி வருவதாகவும் அடுத்த 24 மணி நேரம் மிகவும் மோசமானதாக இருக்கும் என்றும் பிரீமியர் James Merlino தெரிவித்துள்ளார். தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இதற்கு மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரை விக்டோரியாவில் 23 பேர் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகன்றனர். 26 ஆயிரத்து 189 பரிசோதனை முடிவுகளை சுகாதாரத்துறை பெற்றுள்ளது.

New infection on the rise in Melbourne, Corona confirmed for 6 more in Victoria,ஏற்கனவே அறிவித்தபடி சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து சென்றவர்கள் தங்களை உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் வரும்வரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், உடனடியாக தடுப்பூசி போட மக்கள் அனைவரும் முன்வர வேண்டுமென்றும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே விக்டோரியா அரசு மத்திய அரசிடம் இருந்து 200 மில்லியன் டாலர் நிதி கோரியுள்ளது.

Link Source: https://ab.co/3oW9pcR