Breaking News

ஆஸ்திரேலிய மண்ணிலிருந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு விண்ணில் பறந்த நாசா விண்கலன்..!!

ஆஸ்திரேலியாவில் புதியதாக கட்டமைக்கப்பட்டுள்ள அர்ன்ஹம் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து முதன்முதலாக ஏவப்பட்ட விண்கலன் வெற்றிகரமாக பாய்ந்தது.

NASA spacecraft launched from Australian soil after 25 years

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், ஆஸ்திரேலியாவில் இருந்து ராக்கெட்டை ஏவ முடிவுசெய்தது. அதற்கு வடக்கு பிராந்தியத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள அர்ன்ஹம் விண்வெளி ஆய்வு மையம் தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு பிறகு கடந்த திங்களன்று நாசாவின் விண்கலம் விண்ணில் செல்வதற்கு நிலைநிறுத்தப்பட்டது. பல்வேறு மழை மற்றும் புயல் காற்று இருந்தபோதிலும், குறித்த நேரத்தில் விண்கலன் விண்ணில் பாய்ந்தது.

NASA spacecraft launched from Australian soil after 25 years.நூறுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், மாநில அதிகாரிகள், ஊடகத்தினர் கூடி இந்த காட்சியை பார்த்தனர். அதை தொடர்ந்து பேசிய அமெரிக்க தூதர் கேத்லீன் லிவ்லி, திட்டமிடப்பட்ட இடத்தில் விண்கலன் செயற்கைக்கோளை நிலைநிறுத்திவிட்டதாக கூறினார். 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில், நாசா விண்கலனை ஏவியுள்ள நிகழ்வு இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதாக கூறினார். விண்வெளி சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை இரண்டு நாடுகளுக்கும் சேர்ந்து மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் அர்ன்ஹம் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள் மூலம் வானியற்பியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அர்ன்ஹம் மையத்தில் இருந்து 300 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் தெற்கு அரைக்கோளப் பகுதியில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ளும் என நாசா தெரிவித்துள்ளது.