அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்துகிறது. வரும் ஜூன் 26-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதிக்குள் துப்புமா பீடபூமியில் அமைந்துள்ள அரன்ஹம் விண்வெளி மையத்திலிருந்து இவ்மூன்று செயற்கைகோள்களும், அடுத்தடுத்து செலுத்தப்படவுள்ளன.
இந்த செயற்கைக்கோள்கள் சூரிய இயற்பியல், வானியற்பியல் மற்றும் கோள்களின் அறிவியல் நிகழ்வுகளை குறித்து ஆய்வு செய்யும் என நாசா விண்வெளி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து விண்கலன்களை நாசா விண்ணுக்கு செலுத்த முடிவு செய்துள்ளது, அங்குள்ள வானியியல் ஆராய்ச்சியாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் விண்வெளித் துறைக்கு புதிய விடிவுகாலம் பிறந்துள்ளதாகவும், இது ஆஸ்திரேலியாவின் அறிவியல் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் என தொழில் மற்றும் அறிவியல் துறைகளுக்கான அமைச்சர் எட் ஹியூசிக் தெரிவித்துள்ளார்.