Breaking News

விக்டோரியாவில் மர்மமான முறையில் பரவும் வைரஸ் பாதிப்பு : ஆறாவது முறையாக ஊரடங்கை நீட்டித்து ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் உத்தரவு

Mysterious virus outbreak in Victoria. Premier Daniel Andrews orders curfew extended for sixth time

விக்டோரியாவின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ஒன்றின் மூலம் தொற்று பரவலுக்கான முகாந்திரமும் இல்லாத 6 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா வகை வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் ஆறாவது முறையாக விக்டோரியாவில் ஊரடங்கு நீட்டித்து பிரிமியர் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Mysterious virus outbreak in Victoria. Premier Daniel Andrews orders curfew extended for sixth time.இந்த ஊரடங்கு மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்படும் அதுவும் குறிப்பிட்ட ஐந்து காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க, முதியோர் பராமரிப்பு, உடற்பயிற்சி, கல்வி மற்றும் அனுமதிக்கப்பட்ட வேலைகளுக்காக மட்டுமே வெளியில் வரவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இவை அனைத்தும் ஐந்து கிலோமீட்டர் பரப்புக்கு உள்ளாகவே முடித்துக் கொள்ளப் பட வேண்டும் என்றும் மக்களுக்கு சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. முடக்க நிலை தளர்வுகள் அறிவிப்பு வரும் வரை முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் வீடுகளுக்கு உள்ளேயும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதில் மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த மோசமான நிலையை சமாளிக்க வேறு வழி இல்லை என்றும் ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். விக்டோரிய மக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு சில நடவடிக்கைகளை நாம் எடுத்தாக வேண்டும் என்றும், தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Mysterious virus outbreak in Victoria. Premier Daniel Andrews orders curfew extended for sixth time,.மெல்போர்னில் மேற்குப் பகுதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் தோற்றுப் பரவல் மையங்களாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விவரங்கள் சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தவர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அதே நேரத்தில் ஊரடங்கு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெல்போர்னில் சிறு குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Link Source: https://ab.co/3fyFSTq