Breaking News

Ms Berjiklian-க்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

NSW-வின் முன்னாள் பங்குதாரர் Premier Gladys Berejiklian அரசு அலுவலகத்தை தனது லாபத்திற்காக பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். பாராளுமன்றத்திற்கு பணத்தை வழங்கி ஒரு நிறுவனத்தின் செல்வாக்கு அரசின் உயர் மட்டம் வரை வளருவதற்கு துணைபுரிந்துள்ளார்.

Liberal MP Daryl Maguire ஊழலுக்கு எதிராக Independent Commision-ஐ எதிர்கொண்டார்.இரு தினங்களுக்கு முன் Ms Berejikilian முன்னாள் MPயுடன் இருந்த தனது காதல் பற்றி தெரிவித்தது சக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

Mr Maguire தனது அலுவலகத்திலுள்ள printers மற்றும் பாராளுமன்ற ஊழியர்களையும் தனது ரகசிய நிறுவனத்துக்கு பயன்படுத்திக்கொண்டதாக ஒத்துக்கொண்டார்.பல சந்தர்ப்பங்களில் திரு Maguire தனது நாடாளுமன்ற அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் commission வழங்கியதாக ஏற்றுக்கொண்டார்.

NSW அமைச்சர்கள் நன்நடத்தை விதிகளின்படி தனது கருத்து வேற்றுமைகளை பிரதமரிடம் தெரிவித்திருக்க வேண்டும் என திரு Maguire தெரிவித்தார்.

Ms Berejikilian பிரதமரானபோது திரு Maguire-ஐ நாடாளுமன்ற செயலாளர் பதவிக்கு நியமித்தார்.திரு Maguire-க்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை ICAC விசாரித்து வருகிறது.Ms Berjiklian மற்றும் திரு Maguire-க்கும் இடையிலான் தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் விசாரணையில் கேட்கப்பட்டது அதில் திரு Maguire-ன் வணிக ஓப்பந்தங்கள் குறித்து தான் அறியத் தேவையில்லை என Berjiklian தெரிவித்துள்ளார்.

இன்று தெரிந்த விஷயங்கள் அன்றே தெரிந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன் என அவர் தெரிவித்தார்.திரு Maguire உடைய எந்த முறைகேடுகள் பற்றியும் தமக்கு தெரியாது என்று Ms Berjiklian தெரிவித்தார்.

இதை தொடர்ந்து ,NSW Premier Gladys Berjiklian-க்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
தனது முன்னாள் காதலர் Daryl Maguire- ஆல் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மத்தியில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து தப்பித்துள்ளார் Ms Berjiklian.

நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய விவாத்ததை சுருக்கமாக முடித்ததற்காக அரசின் மீது NSW Labor கண்டனம் தெரிவித்தது.