Breaking News

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மழை வெள்ளம் காரணமாக பெரும்பாலான சாலைகள் மூடல் : சீரமைப்பு நடவடிக்கை காரணமாக சுங்கச் சாலைகளில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

Most roads in Queensland closed due to flooding. No tolls on toll roads due to repairs.

தென் கிழக்கு குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரேநாளில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவானதால் பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுங்க சாலைகளில் தற்போது சீரமைப்பு நடவடிக்கைகளில் இருப்பதால் அங்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற வாகனங்களை இயக்க வேண்டாம் என்று நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் Mark Bailey  கேட்டுக்கொண்டுள்ளார். டனல் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறியுள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் ஏராளமான கார்கள் சாலைகளில் வருவது அந்த பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து தேவையின்றி மக்கள் வாகனங்களை வெளியில் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் Mark Bailey  கேட்டுக்கொண்டுள்ளார். குறைந்த அளவில் அகப்படும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த மாறும் மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே வானிலை ஆய்வு மையம் மழைப்பொழிவு தொடர்பான பல்வேறு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மீண்டும் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் ஏழு பிரதான சாலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கு சீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மக்களின் ஒத்துழைப்பு அந்த பணிகளை விரைந்து முடிக்க உதவும் என்றும் அமைச்சர் Mark Bailey  தெரிவித்துள்ளார்.

பழுதடைந்துள்ள சாலைகள் அந்த பகுதியில் உள்ள மாற்று போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சாலை மற்றும் போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனை அந்த பகுதி மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Link Source: https://ab.co/3tvLnbH