Breaking News

விக்டோரியாவில் அரசு கொண்டுவந்துள்ள புதிய தொற்று பரவல் சட்டத்திற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அதேநேரத்தில் விக்டோரியாவில் புதிதாக 1365 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

More than a thousand people took part in a rally in Victoria against the government's new epidemic law. Meanwhile, 1365 new cases have been confirmed in Victoria. Nine people were died.

மெல்போர்ன் சிபிடி அருகே திரண்ட ஆயிரத்திற்கும் அதிகமான போராட்டக்காரர்கள், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தொற்றுப்பரவல் சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த சட்டத்தில் , கட்டாய தடுப்பூசி செலுத்த வழிவகை செய்யும் அம்சத்தை நீக்க வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

More than a thousand people took part in a rally in Victoria against the government's new epidemic law. Meanwhile, 1365 new cases have been confirmed in Victoria. Nine people were died..இந்த புதிய தொற்று பரவல் சட்டத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், போராட்ட குழுவினர் மத்தியில் உரையாற்றிய யுனைட்டட் ஆஸ்திரேலியா எம்.பி கிரேக் கெல்லி, புதிய தொற்று பரவல் சட்டத்தை நீக்கி, கட்டாய தடுப்பூசி அம்சத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதே நேரம் தடுப்பூசிக்கு ஆதரவான குழுவும், இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டதில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 200 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

புதிய சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடைபெறுவதை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

More than a thousand people took part in a rally in Victoria against the government's new epidemic law. Meanwhile, 1365 new cases have been confirmed in Victoria. Nine people were diedவிக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1365 நபர்களுக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாகாணத்தில்12 வயதை கடந்தவர்களில் 90% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் டெல்டா வைரஸால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 547 ஆக அதிகரித்துள்ளது. விக்டோரியாவில் தற்போது 14383 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் 288 மருத்துவமனையிலுல், 44 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

.
கடந்த 24 மணி நேரத்தில் 67,545 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, 4094 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது வரை விக்டோரியாவில் யாருக்கும் ஒமிக்ரான் வகை வைரஸ் கண்டறியப்படவில்லை.

Link Source: https://ab.co/3okm7Uk