Breaking News

சிங்கப்பூரில் 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் : ஆனாலும் அங்கு இயல்பு நிலை திரும்பாத சூழல் தொடர்கிறது

உலக நாடுகளில் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்ட நாடாக சிங்கப்பூர் விளங்கி வருகிறது அங்கு 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் 85 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களாக உள்ளனர். அதேநேரம் இந்த மாதத்தில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சபட்ச தொற்று பாதிப்பு பதிவாகி வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

More than 80 percent of Singaporeans have received two doses of the vaccine,. but the situation there remains reversible.ஆகஸ்ட் மாதத்தில் அதிக பட்ச தொற்று பாதிப்பு எண்ணிக்கையாக 555 இருந்த நிலையில், நேற்று முன்தினம் 58வது உயிரிழப்பையும் சிங்கப்பூர் சந்தித்துள்ளது. வேறு சில நோய்களுடன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 80 வயது பெண் ஒருவர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அலுவலகங்களில் உணவருந்தும் இடம் ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடம் உள்ளிட்டவற்றில் இருந்து தொற்று பரவல் உறுதியான நிலையில், அலுவலகங்களில் ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில வாரங்கள் மிக மோசமானதாக இருக்கும் என்றும் ஒரு நாள் தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கும் அளவுக்கு நெருக்கடி நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் உலகத்திலேயே மிக அதிக அளவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய நாடாக சிங்கப்பூர் இருப்பதால் தொற்று பரவல் அதிகரிக்காது என்ற நம்பிக்கை இருப்பதாக தொற்றுநோயியல் ஆராய்ச்சியாளர் Alex Cook தெரிவித்துள்ளார்.

More than 80 percent of Singaporeans have received two doses of the vaccine. but the situation there remains reversible.ஃபைசர், மாடெர்னா, சீனாவின் சினோவேக் உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாகவும் ஆஸ்திரேலியாவுடன் 5 லட்சம் தோஸ் தடுப்பூசிகளை பரிமாறிக் கொண்டதாகவும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. மிக வேகமாக தடுப்பூசி செலுத்தி பெரும்பாலான மக்களை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்ததே தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிய நடவடிக்கையாக இருக்கும் என்றும் Alex Cook கூறியுள்ளார்.

80% இரண்டு தடுப்பூசி என்பது போதுமானதாக இருக்காது என்றும் 90 சதவீதம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பட்சத்திலேயே அடுத்த வகை வைரஸ் தொற்றில் இருந்து நாம் தப்பிக்க முடியும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்காக நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3nwCqNW