Breaking News

டெல்டா வகை கொரோனா வைரஸால் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 294 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

1 More than 500 people have died in the state of New South

கடந்த ஜூன் மாதம் தொடங்கி நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 502 பேர் டெல்டா வகை வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா முதல் அலையின் போது 56 பேர் மட்டுமே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், உயிரிழப்பு இந்த மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாண பிரிமீயர் Dominic Perrottet, தங்கள் மாகாணத்தில் 16 வயதை கடந்தவர்களில் 93% பேரு ஒரு தவனை தடுப்பூசியும், 84% பேருக்கு இரண்டு தவனை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்லார்.

More than 500 people have died in the state of New South Walesதடுப்பூசி செலுத்துவதில் தாங்கள் வெற்றியடைந்தாலும், கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்றும் Dominic Perrottet சுட்டிக்காட்டியுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்படும் நிலையில், தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், அதை சமாளிக்க மருத்துவமனைகளையும், அதனை கட்டமைப்புகளையும் தயார் படுத்தியுள்ளதாக பிரிமீயர் Dominic Perrottet தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 67910 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 502 பேரில் பெரும்பாலும் தடுப்பூசி செலுததாதவர்கள் என்பதும், 80 வயதை கடந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இம்மாகாணத்தில் கொரோனா தொற்றால் 474 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 57 பேர் செயற்கை சுவாசத்திலும், 116 பேர் அவசர சிகிச்சை பிரிவிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3mckNSs