இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாகாண பிரிமீயர் Dominic Perrottet, ஹாக்ஸ்பரி பகுதியில் நிலமை மிக மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதே நிலை மார்ச் மாத இறுதி வரை நீடிக்கக்கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
ஹாக்ஸ்பெரி, நீப்பன், ஜார்ஜஸ் ரிவர், கோலோ, மெக்டொனால்ட் ஆற்றுப்பகுதி போன்ற பகுதிகளுக்கு அபாயகரமான பதிகளாக அறிவிக்கப்பட்டு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் துறை அமைச்சர் ஸ்டெப் கூக்கி தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்திற்கும் மோசமான வானிலையே நிலவ சாத்தியங்கள் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
மாநில அவசர சேவை அமைப்பு இது வரை 76 இடங்களில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூக்கி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கான வானிலை மையம், மாகாணத்தின் வடக்கு பகுதியில் வெள்ள பாதிப்புகள் தொடரும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் மத்திய கடற்கரை பகுதிகள், ஹண்டர் மற்றும் சிட்னி நகர் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 50 மிமீ முதல் 250 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இது வரை 4 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் அரசு கொடுக்கும் அறிவிப்புகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று பிரிமீயர் Dominic Perrottet வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Link Source: https://bit.ly/3pCu5bE