ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும், அந்தந்த மாநில அரசுகள் நோய் பரவலை கட்டுப்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், தொடர்ந்து மக்கள் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். நேற்று முன் தினம் மொத்தம் 191 பேர் கொரோனாவுக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டன. நேற்று அதே எண்ணிக்கை 203-ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய மாநில முதல்வர் டாமினிக் பெர்ரோடட், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களில் பாதி நோயாளிகள் தடுப்பூசி போடாதவர்களாக உள்ளனர். அதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் உடனே அதையும் செலுத்திக்கொள்ளுங்கள். மாநிலத்தில் மொத்தம் 47 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு தகுதியுள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மாநில சுகாதார அலுவலர் கெர்ரி சாண்ட் பேசுகையில், வரும் காலங்களில் வரும் காலங்களில் கொரோனா மரணங்கள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் 78.3 சதவீத 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுவிட்டது. அதே வயதுடைய 13.1 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
Link Source: https://ab.co/3tD8vGE