Breaking News

கனடா நாட்டில் உண்டு உறைவிட பள்ளி வளாகத்தில் 200 மேற்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

more than 200 bodies of children found on a boarding school campus in Canada has come as a shock

கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா கம்லூப்ஸ் பகுதியில் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து 1978 வரை உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வந்தது. 1890 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை கனடா அரசின் நிதி உதவியுடன், கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள் இந்த பள்ளியை நிர்வகித்து வந்தனர்.

கனடாவில் பூர்வக்குடிகளாக கருதப்படும் Tk’emlúps மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் , பூர்வக்குடிகளின் பிள்ளைகள் இந்த பள்ளியில் கட்டாயம் பயில வேண்டும் என்ற திட்டம் நடைமுறையில் இருந்தது. இதனால் பூர்வக்குடிமக்களிடம் இருந்த அவர்களில் குழந்தைகள் வலுக்கடடாயமாக பிரிக்கப்பட்டு இந்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பள்ளியில் அக்குழந்தைகள் தங்கள் தாய் மொழிகளை பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது அந்த உண்டு உறைவிட பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எழும்புக்கூடுகள் புதைப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Chief Rosanne Casimir of the Tk'emlups te Secwépemcஅந்த எலும்புக்கூடுகலில் 3 வயது குழந்தைகளின் எலும்பு கூடுகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பூமியை ஊடுருவி செல்லும் ரேடார் கருவியின் மூலம் இந்த குழந்தைகளின் உடல்கள் அங்கிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஏராளமான இடங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்து புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த Tk’emlúps te Secwépemc அமைப்பின் தலைவர் ரோசாணி காசிமிர், இந்த கொடுமையை நினைக்க கூட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த பள்ளியில் 1,50,000 குழந்தைகளை சேர்க்க இலக்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் உயிரிழந்த குழந்தைகள் குறித்த எந்த ஆவணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உடல்கள் இன்னும் தோண்டி எடுக்கப்படவில்லை என்றாலும், சுமார் 3500 குழந்தைகள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

more than 200 bodies of children found on a boarding school campus in Canada has come as a shock.இந்த இனப்படுகொலை குறித்து கனடா அரசு 2008 ஆம் ஆண்டு மன்னிப்பு கோரிய நிலையில், உறைவிடப் பள்ளியில் இழைக்கப்படட கொடுமை குறித்தும், அங்கு அரங்கேறிய இனப்படுகொலை குறித்தும் ஏராளமானவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தைகளின் உடலை உரிய முறையில் அடக்கம் செய்யம் பொறுப்பை Tk’emlúps te Secwépemc அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகாத்தில் இந்த கொடூர சம்பவம் குறித்து ஏதேனும் பதிவுகள் உள்ளதா என்பதும் குறித்தும் தற்போது தேடப்பட்டு வருகிறது.

Link Source: https://abc7ne.ws/3fYw2tm