Breaking News

ஆப்கானிஸ்தான் விமான நிலையத்திற்கு வெளியே குண்டு வெடிப்பில்100 பேரை தாண்டிய பலி எண்ணிக்கை : ஆஸ்திரேலியர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்

More than 100 killed in bomb blast outside Afghanistan airport. Australia evacuation suspended

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தை முற்றுகையிட்டு வந்தநிலையில் அங்கு தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

More than 100 killed in bomb blast outside Afghanistan airport. Australia evacuation suspended.,.இந்நிலையில் காபூல் அமித் கர்சாய் விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஐ தாண்டி இருப்பதாக ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் ஐஎஸ் – கே தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அமெரிக்க படைவீரர்கள், ஆப்கானிஸ்தான் மக்கள் என பலர் உயிரிழந்தனர். இதேபோன்று 28 தாலிபான்களும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த விவகாரத்தை மறக்கப் போவதில்லை, மன்னிக்கப் போவதில்லை என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

More than 100 killed in bomb blast outside Afghanistan airport. Australia evacuation suspended..அதேபோன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். அமெரிக்க படை வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் இதுபோன்ற மனிதாபிமானமற்ற கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய படைவீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

More than 100 killed in bomb blast outside Afghanistan airport. Australia evacuation suspended.இதனிடையே காபூல் விமான நிலையத்தைச் சுற்றிலும் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில் அங்கிருந்து ஆஸ்திரேலியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தாக்குதலை அடுத்து விமான நிலையத்தைச் சுற்றிலும் ஏராளமான உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. விமான நிலையத்தை விட்டு மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஏற்கனவே தாலிபான்கள் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது இந்த தாக்குதல் சம்பவத்தின் மூலமாக மேலும் பலர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தீவிரவாத அமைப்பின் வெடிகுண்டு தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து மக்களையும் அகதிகளாக வரும் ஆப்கன் மக்களையும் அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3mKFVzY