Breaking News

நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் ப்ளு மவுண்டன் பகுதியில் இருந்து காணாமல் போன 9 வயது சிறுமி : 5 வது நாளாக தேடும் பணி தீவிரம்

குயின்ஸ்லாந்தின் Coolangatta பகுதியில் தனது பாட்டியுடன் வசித்து வந்த 9 வயதுச் சிறுமி Charlise Mutten, விடுமுறைக்காக தனது தாய் Kallista Mutten உடன் ப்ளு மவுண்டன் பகுதிக்கு சென்றுள்ளார். Shadforth Road பகுதியில் உள்ள வளர்ப்பு தந்தையான Justin Stein க்கு சொந்தமான எஸ்டேட் வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த வியாழன் அன்று பிற்பகலில் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில், தாய் Kallista Mutten காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் அவரது தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரிடம் விசாரணை நடத்த முடியாமல் போனதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Missing 9-year-old girl from the Blue Mountain area of ​​New South Wales. 5th day search intensity.இதனிடையே, மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ப்ளு மவுண்டன் பகுதியில் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 5 வது நாளாக தொடர்ந்து 9 குழுக்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுமி Kallista Mutten யை உயிருடன் மீட்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், அதே நேரத்தில் ஒவ்வொரு நாளில் முடிவில் அந்த நம்பிக்கை குறைந்து வருவதாகவும் கிரிமினாலஜிஸ்ட் Xanthe Mallett தெரிவித்துள்ளார்.

நியூ சவுத்வேல்ஸ் காவல்துறையினருடன் இணைந்து புலனாய்வு குழு, தடவியல் நிபுணர்கள், உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிறுமியின் தாய் முக்கிய நபராக பார்க்கப்படும் நிலையில் அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் தான் உரிய முடிவுகள் எட்டப்படும் என்று கிரிமினாலஜிஸ்ட் Xanthe Mallett கூறியுள்ளார்.

சிட்னியின் வின்ஸ்டர் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்கல் தேடுதல் குழுவினர் பணியை தொடர்ந்து வருகின்றனர். மேலும், இந்த குழுவினருடன் கொலை வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்துள்ளனர்.

பள்ளிச்சிறுமி Kallista Mutten காணாமல் போன விவகாரத்தை மிகுந்த சந்தேக கண்ணோட்டத்துடன் விசாரித்து வருவதாகவும், இயற்கை சூழல் சரியாகும் பட்சத்தில் தேடுதல் நடவடிக்கை தீவிரமடையும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3fEZFzZ