Breaking News

வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல் : ஈரான் புரட்சிப் படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக அரசு தகவல்

ஈராக்கின் வடக்குப் பகுதியான Kurdish பிராந்தியத்தின் Erbil நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பெருந்தொலைவு சென்று தாக்கும் சுமார் 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளது. ஈரானின் குறிப்பிட்ட மையங்களில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், முழுக்க கட்டடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. காயமடைந்த வீரர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Missile attack on US embassy in northern Iraq. Government says Iranian Revolutionary Guards responsible for attack.6 ஏவுகணைகள் அமெரிக்க தூதரக அலுவலகத்தின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும், மேலும் 6 ஏவுகணைகள் எந்த பகுதிகளில் உள்ளது என்பது குறித்து விசாணை நடத்தி வருவதாகவும் அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். புதிய தூதரக கட்டடம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்ற காரணத்தால் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் நடவடிக்கை ஆத்திரத்தை தூண்டும் வகையில் நடத்தப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அரசின் செயல்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஈரானின் இந்த நடவடிக்கை குறித்து சர்வதேச சமூகம் விசாரைணக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிப்படையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து இந்த சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றும், இஸ்ரேல் பெரிய விலை கொடுக்க வேண்டும் என்றும் ஈரான் எச்சரித்து இருந்தது.

Missile attack on US embassy in northern Iraq. Government says Iranian Revolutionary Guards responsible for attack,இந்நிலையில் தான் ஈராக்கின் இர்பில் பகுதியில் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஈரான் புரட்சிகர படை தாக்குதல் சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பேற்பதாக கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஈரானின் அரசியல் தலைமையின் நிலைப்பாட்டை ஈராக் அறிய விரும்புவதாகவும், இந்த நிலை தொடருமானால் விரைவில் போர் மூளும் அபாயம் உள்ளதாகவும் கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் ஈராக் அமைச்சர்கள் தெரிவித்துள்ளது.

தூதரக தாக்குதல் காரணமாக குர்திஷ் விமான நிலைத்தில் இருந்து விமானங்களை இயக்குவதில் எந்தவித சிக்கலும் இல்லை என்றும், எர்பில் மக்கள் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் அடிப்படையில் பாதிப்பு குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டும் என்றும் குர்திஷ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3tVz2xC