Breaking News

பரவி வரும் COVID-19 குறித்த தவறான தகவலை பற்றி தொழில்நுட்ப நிறுவனங்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் !

கொரோனா தொற்று குறித்து தவறான தகவல்களை பரப்பும் சமூக ஊடக உள்ளடக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஆஸ்திரேலிய தொழில்நுட்ப மற்றும் சுகாதார நிபுணர்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. அப்போது தான் நாட்டில் நிலவும் பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என கூறியுள்ளனர் .

தவறாக வழிநடத்தும் பேஸ்புக், யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் 1,000 க்கும் மேற்பட்ட ஒட்டுமொத்த பதிவைப் பெற்றவுடன், அதை ‘லைவ் லிஸ்டில்’ சேர்க்க வேண்டும் என அரசாங்க அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்.

tech companies says healthபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் பரவியுள்ள தவறான தகவல்கள் ஆஸ்திரேலிய மருத்துவ அதிகாரிகளின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கிறது. இந்த தவறான தகவலைப் பற்றியும், எவ்வகையான புள்ளிவிவரங்கள் அதைப் பயன்படுத்துகின்றன என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று அந்தக் கடிதம் தெளிவுபடுத்தியுள்ளது .

இந்த கடிதத்திற்கு நோய்த்தடுப்பு கூட்டணி, ஆஸ்திரேலியாவின் நோய்த்தடுப்பு அறக்கட்டளை, கொரோனாவாக்ஸ் மற்றும் டோஹெர்டி நிறுவனம் ஆதரவு அளித்துள்ளன. “COVID-19 தவறான தகவல்களைப் பரப்புவது குறித்து தற்போது ஆராய்ந்து வருவது பிக் டெக் நிறுவனங்கள் தான்.

ஆஸ்திரேலியாவின் நோய்த்தடுப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த கேத்தரின் ஹியூஸ் கூறுகையில் , “தவறான தகவல்களால் உயிர்கள் வீணாகி வருகின்றனர் ” என்பதால் இதன் மீது நடவடிக்கை தேவை என கூறினார். மேலும் , ஆன்லைனில் வந்த தவறான தகவல்களால் பயந்து தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டாம் என பெற்றோர் மனமுடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், 50 சதவீத ஆஸ்திரேலியர்கள் தகவல் அறிந்துகொள்ளும் ஆதாரமாக சமூக ஊடகங்களை தான் நம்பியுள்ளனர் என்றும் , இதில் மூன்றில் இரண்டு சதவீதம் பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் தான் கொரோனா தொற்று குறித்த தவறான தகவல்களை தெரிந்து கொண்டதாக கூறியுள்ளனர் .

மலேரியாவிற்கு எதிர்ப்பு மருந்தான hydroxychloroquine கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுவது தடை செய்யவேண்டும் என Mr Kelly மற்றும் Liberal colleague George Christensen ஆகியோர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், Mr Kelly வேண்டுமென்றே மருத்துவ நிபுணர்களை குறைவாக மதிப்பிடுவதாக, தொழிற்கட்சியின் சுகாதார செய்தித் தொடர்பாளர் Chris Bowen குற்றம் சாட்டியுள்ளார்.