Breaking News

காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல் அமெரிக்க வரலாற்றில் ஒரு கருப்பு தினம் என்றும், ஆப்கானிஸ்தானின் மோசமான எதிர்காலத்தை நமக்கு உணர்த்துவதாக ராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Military experts say the bombing of Kabul airport was a black day in US history and a sign of Afghanistan's bleak future.

காபூல் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட பொதுமக்கள் 60 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ், ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், முறையான திட்டமிடல் இன்மையே இந்த தாக்குதலுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

Military experts say the bombing of Kabul airport was a black day in US history and a sign of Afghanistan's bleak future20 ஆண்டுகளாக ஆப்கான் போரில் ஈடுபட்ட அமெரிக்க படைகள், மற்றும் நேட்டோ படைகளின் வெளியேற்றத்தை முறையான திட்டமிடலுடனும், அமைதியான முறையில் மேற்கொண்டிருக்க முடியும். அதனை செய்வதற்கும் ஜோ பைடன் அரசு தவறிவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் தாக்குதல் குறித்த எச்சரிக்கை என்பது ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகளுக்கு எப்போது இருக்கும் நிலையில், கூடுதல் முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆனால் கடந்த 1983 பெய்ரூடில் நடைபெற்ற தாக்குதலில் 241 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது , அப்போதைய அதிபர் ரீகன் எதிர்கொண்ட மோசமான நிலையை தற்போதைய அதிபர் ஜோ பைடனும் எதிர்கொண்டு வருகிறார்.

Military experts say the bombing of Kabul airport was a black day in US history and a sign of Afghanistan's bleak future...பெய்ரூட் சம்பவத்துக்கு பிறகு, தங்கள் படையை மத்திய கிழக்கு நாடுகளுக்கு இனி எப்போதும் அனுப்ப மாட்டோம் என்று உறுதியளித்திருந்த அமெரிக்கா, இஸ்ரேல், ஈராக் போன்ற நாடுகளில் நடைபெற்ற போர்களில் தலையிட்டது குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்க படைகளால் சுமார் $2.6 டிரில்லியன் செலவுடன், 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

2019ல் முன்னாள் அதிபர் டிரம்ப் தாலிபான்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தம், அமெரிக்காவிற்கு பாதகமான ஒன்று என்றும், அமைதியான முறையில் அமெரிக்கர்கள் வெளியேற இதில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இரத்த கறையுடனும், ஏராளமான காயங்களுடனும் வெளியேறும் அமெரிக்காவின் வெளியேற்றம் வரலாற்று ரீதியாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டாலும், ஆப்கானிஸ்தான் மக்கள் ஏமனை போல முடிவுறா உள் நாட்டு போரை சந்திக்க நேரிடலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Link Source: https://ab.co/3zsA0Tn