Breaking News

அரசியலில் நடப்பதை தேசிய பிரச்னையாக மாற்ற நினைத்தால் எதுவும் பலனிக்காது என பிரதமர் ஸ்காட் மோரீசன் நடவடிக்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா உளவு அமைப்பின் நிர்வாக தலைவர் மைக் பர்கஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஸ்காட் மோரீசன் தொழில்துறை அமைச்சரை தரக்குறைவாக விமர்சித்தார். அவரை சீனாவின் ஊதுகுழல் என்று கூறி விமர்சனம் செய்தார். இது நாடு முழுவதும் பேசு பொருளானது.

Mike Burgess, executive chairman of the Australian Intelligence Agency, has spoken out against Prime Minister Scott Morrison's move to turn politics into a national issue..இந்நிலையில் ஆஸ்திரேலிய உளவு அமைப்பின் இயக்குநர் மைக் பர்கஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது பாராளுமன்றத்தில் பிரதமர் மோரீசனின் விமர்சனங்கள் குறித்து கேள்விகள் முன்வைகப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் பொது தேர்தலில் வேறு எந்த நாட்டின் தலையீடும் இருக்காது. நம்முடைய தேர்தல் நடைமுறை ஜனநாயகத்துக்கு வலுவாக உள்ளது. எனது ஊழியர்களுக்கு எந்தவிதமான அரசியல் பாகுபாடும் கிடையாது. ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் கொடுப்பார்கள்.

அரசியலை அரசியல் தலைவர்களிடமே விட்டுவிடுகிறேன். ஆனால் அண்டை நாட்டின் தலையீடு உள்நாட்டில் இருப்பதாக பிரதமர் கூறுவதை நம்ப முடியவில்லை. இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் யாருக்கும் பலன் தராது. அரசியலை வைத்து நாட்டின் பாதுகாப்பை பலியாக்கிவிடக்கூடாது என்று ஆஸ்திரேலிய உளவு அமைப்பின் இயக்குநர் மைக் பர்கஸ் கூறினார்.

Link Source: https://ab.co/3JSBMST