Breaking News

ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்பட்ட Astrazeneca தடுப்பூசி செலுத்தப்பட்ட நபருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்ட விவகாரத்தில்  தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக முதன்மை மருத்துவ அலுவலர் Michael Kidd தெரிவித்துள்ளார். 

Michael Kidd, chief medical officer,

மெல்போர்னில் உள்ள Box மருத்துவமனையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி  44 வயது நபருக்கு  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு உடல் பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நுரையீரல், கல்லீரல் மற்றும் உணவுக்குழாய் பகுதிகளில் இரத்தம் உறைதல் ஏற்பட்டிருப்பதும், இரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதையும் கண்டறிந்தனர்.

ஆனால் தடுப்பூசி செலுத்தப்பட்டது தான் அவரின் உடலில் இரத்தம் உறைதல் ஏற்பட காரணம் என்பதை உறுதிபடுத்தவில்லை.

Blood-clotting cases in Australia AstraZeneca vaccine recipient being taken 'very seriously' by Therapeutic Goods AdministrationAstra Zeneca தடுப்பூசிக்கும் இரத்தம் உறைதல் பிரச்சனைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆலோசிக்க சிகிச்சை பொருள் நிர்வாகத்துறை (Therapeutic Goods Administration) சனிக்கிழமை கூடுகிறது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த முதன்மை மருத்துவ அலுவலர் Michael Kidd தடுப்பூசிக்கும் – இரத்தம் உறைதலுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வில் உறுதிபடுத்தப்படவில்லை என்று கூறியுள்ளர்.

அதே நேரம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு 4 நாட்களுக்கு பிறகும் தலைவலி இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அனுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் Kidd வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்த நினைப்பவர்கள் இரத்தம் உறைதல் குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும், இது அரிதிலும் அரிதானது என்று குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஏற்படும் இரத்தம் உறைதல் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஐரோப்பிய நிபுணர்கள் இலட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் ஒரு சிலருக்கு மட்டுமே இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது  தெரியவந்துள்ளதாக  ஆஸ்திரேலிய மருத்துவ குழுமத்தின் துணைத் தலைவர் Chris Moy தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இரத்தம் உறைதல் பிரச்சனையை உலகம் முழுவதும் நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

TGA தன்னுடைய வழிகாட்டு நெறிமுறைகளில் AstraZeneca தடுப்பூசிக்கும் இரத்தம் உறைதலுக்கும் தொடர்பிருப்பது உறுதிபடுத்யப்படவில்லை என்று கூறியுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் செலுத்தப்படும்  AstraZeneca தடுப்பூசியால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. பிரிட்டனில் 30 பேருக்கு  இரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஜெர்மனி 60 வயதுக்கு குறைவானவர்களுக்கும், கனடா 55 வயது குறைவானவர்களுக்கும் AstraZeneca தடுப்பு மருந்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

Lancet ஆய்வறிக்கையில் Astra zeneca தடுப்பூசி 81% பலன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இது வரை சுமார் 8 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.