Breaking News

விவசாய நிலத்தை சேதப்படுத்தும் எலிகள்..கால்நடைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயம் !

Mice damaging agricultural land Risk to livestock

NSW-ன் மத்திய மேற்கு பகுதியில் உள்ள ஆரஞ்சில் வசிப்பவர்களை எலிகள் துன்புறுத்துகிறது மேலும் நூற்றுக்கணக்கான பூச்சிகள் சாலைகள், வீடுகள் மற்றும் பயிர்களை ஆக்கிரமித்துள்ளன.இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பாளர்கள் சமூக ஊடகங்களில் எலிகளை பிளேக் என்று அழைத்து வருகின்றனர். ஒரு வீட்டில் மட்டுமே 250 எலிகளை பிடித்துள்ளனர். மேலும் ஒரு நாய் 200க்கும் மேற்பட்ட எலிகளை வேட்டையாடியது.

Mice damaging agricultural land and Risk to livestockபேஸ்புக்கில் பதிவிட்ட சில ஆரஞ்சு குடியிருப்பாளர்கள், எலிகள் அங்கு உள்ள வைக்கோலில் கூடுகட்டி இருக்கிறது மேலும் அதனை கொல்வதற்காக விவசாயிகள் வைக்கோலை எரிப்பதாக கூறியுள்ளனர் . எலிகள் வைக்கோலில் உள்ள தானியங்கள் மற்றும் பயிர்களை சாப்பிட்டு அதில் கூடுகளை உருவாக்கி இருப்பதாக அவர்கள் கூறினார்கள் .

எலிகளின் சிறுநீர் மற்றும் மலங்கள் வைக்கோலை கெடுக்கும் மேலும் இது கால்நடைகளுக்கு நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்துகிறது.
எலிகள் தனது எண்ணிக்கையை மிக விரைவாக உருவாக்க முடியும் என ஆரஞ்சு மேயர், கவுன்சிலர் Reg Kidd கூறினார்.எலிகள் எளிதாக உள்ளே நுழையக் கூடிய எந்த ஒரு துளைகளையும் நீங்கள் உறுதியாக தடுத்துக் கொள்ளுங்கள். மருந்து மற்றும் பழைய Steel கம்பளியை பயன்படுத்தி தடுக்கலாம் எனவும் கூறினார். மேலும் இறந்த எலிகளை மிக எச்சரிக்கையுடன் கையாளுமாறும் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

mouseவிவசாயிகள் தங்கள் நிலத்தில் phosphide பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்குமாறு,NSW விவசாயிகள் சங்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்திடம் கேட்டுள்ளது. மேலும் நாங்கள் இதை திறம்பட செயல் படுத்துவோம்,இதனால் மக்கள் நடவு செய்வதற்கு முன்பே தூண்டில் போட முடியும்,என விவசாய சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார்.