ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான உள்ளூர், புலம்பெயர்ந்தோர் மற்றும் LGBTIQ சமூகத்தை சேர்ந்த ஏராளமான பெற்றோர் மன நலம் தொடர்பான பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வருவதாக கூறப்படுகிறது. ஏராளமான குடும்பங்கள் இது தொடர்பான உதவியை தேடிவரும் நிலையில் 7-ம் தேதி முதல் 13ம் தேதி வரை மன நலம் வாரம் கடைபிடிக்கப்படும் என்றும், இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட அமைப்புகள் பெற்றோர் ஆகப் போகும் மற்றும் புதிய பெற்றோர்களுக்கான மன நலம் குறித்த உதவிகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கருவுறுதல், பேறு கால பராமரிப்பு, பிரசவம், குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இளம் பெற்றோர் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாகவும், அதற்கான தீர்வுகளை தேடி உள்ளூர், பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட பெற்றோர் உள்ள நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த மன நலம் வாரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் இணைந்துள்ள 40க்கும் மேற்பட்ட குழுக்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு குழுக்களாக மன நல ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
பழங்குடியின பெண்ணான Jami Seale தான் கருவுற்ற நிலையில் தன் தொப்புள் கொடியை எரித்து விட வேண்டும் என மருத்துவனை நிர்வாகத்திடம் கோரியதாகவும், அதற்கு மருத்துவர்கள் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் சார்ந்த சமூகத்தில் தொப்புள் கொடி தான் பிறப்பின் அடையாளமாக பின்பற்றப்படுகிறது என்றும் Jami Seale கூறியுள்ளார். பிரசவத்துக்கு பிந்தைய பதட்டமான சூழலில் Jami Seale இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு முறையான மன நல ஆலோசனை தேவைப்பட்ட நிலையில், அவை அளிக்கப்பட்ட பின்பு அவர் சீரான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதே போன்று 5க்கும் மேற்பட்ட இளம் தாய்மார்கள் மன அழுத்தத்தில் உள்ள நிலையில் அவர்களுக்கான உரிய சிகிச்சைகள் தற்போது தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேதியியல் மாற்றம், ஹார்மோன் நிலைத்தன்மை உள்ளிட்ட காரணங்களால் இளம் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகள கண்டறிந்து அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையும், ஆலோசனையும் அவசியமாகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Link Source: https://bit.ly/3oqSY8X