Breaking News

மெல்பர்னில் தீ விபத்து-ஒருவர் பலி !

Melbourne fire -man found dead

மெல்பர்னின் தென்கிழக்கு CBD பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார்.மெல்பர்னின் தென்கிழக்கே CBD பகுதியில் Highett, என்னும் இடத்தில் உள்ள Chesterville சாலையில் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பெண் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்து, அருகில் உள்ளவர்களிடம் உதவி கோரினார்.

Melbourne fire -man found dead 1சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் சிக்கிய ஆண் நபரை காப்பாற்ற முடியவில்லை. தீவிபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவருடன் இருந்த பெண் கடும்புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சைக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

இந்த தீ விபத்து குறித்து விக்டோரியா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் தெரிய வரும் என்று போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறினார்.