Breaking News

மெல்போர்னில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ப்ரீமியர் அறிவிப்பு : கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு விருந்தினர்களை அனுமதிக்கவும் திட்டம்

மெல்போர்னில் தற்போது நடைமுறையில் உள்ள முடக்கநிலை படிப்படியாக தளர்த்தப்படும் என்றும், அங்கு சுமார் 60 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் தெரிவித்துள்ளார். 70 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதும் பெரும்பாலான தளர்வுகள் அளிக்கப்படும் என்றும், அக்டோபர் மாத இறுதியில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

Melbourne announces deregulation Premier. Plan to allow guests to celebrate Christmas..அதனைத்தொடர்ந்து கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்காக வீடுகளில் விருந்தினர்களை அனுமதிக்கும் எண்ணிகையை 30 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்படும் என்றும் ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் தெரிவித்துள்ளார். மேலும், மெல்போர்னில் மக்கள் 80 சதவீதத்திற்கும் மேல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பட்சத்தில் முகக்கவசம் அணிவது மட்டுமே கட்டுப்பாடாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றும், கனத்த மனதோடு மேலும் சில கட்டுப்பாடுகளை தொடர வேண்டிய நிலை உள்ளதாகவும் ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் கூறியுள்ளார். சுகாதாரத்துறையின் அறிவுரையின் அடிப்படையில் தடுப்பூசி நடவடிக்கையை தீவிரப்படுத்தும் முயற்சிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து 10 முதல் 15 கிலோமீட்டர் பரப்பில் உள்ள வீடுகளுக்கு விருந்தினர்கள் செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், புத்துணர்வு மையங்கள், டென்னிஸ், கோல்ப் விளையாட்டு மையங்களை திறக்கவும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகளுக்காக வெளியில் செல்லும் பணியாளர்கள் வாரம் ஒரு முறை கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், வெளியில் நடக்கும் ஒன்று கூடல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Melbourne announces deregulation Premier. Plan to allow guests to celebrate Christmas...அக்டோபர் 5ம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கும் நோக்கில் அவர்களுக்கு நடத்தப்படும் திறன் சார்ந்த தேர்வுகள் 6ம் தேதி முதலே தொடங்கும் என்றும் ப்ரீமியர் கூறியுள்ளார். அதே நேரத்தில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் வரை மாணவர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 26ம் தேதிக்குள் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிறைவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DQ 3, DQ 4 என பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தடுப்பசி செலுத்திக் கொள்ளும் சதவீதத்தின் அடிப்படையில் அடுத்தடுத்த தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்றும் விக்டோரியா ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் தெரிவித்துள்ளார்.

Link Source: shorturl.at/cmxJZ