Breaking News

Melbourne-ல் கொரோனா வைரஸ் முடக்கத்தில் மனித உரிமை மீறல் – மக்கள் நல விசாரணை அதிகாரி கண்டுபிடிப்பு !

Melbourne-ல் உள்ள 9 Public Housing-ல் கொரோனா அவசர முடக்கத்தில், நேரடி மனநல அறிவுரை பின்பற்றபடவில்லை என்றும், அங்கு மனித உரிமை விதிகள் மீறல் நடைபெற்று உள்ளதாகவும், Victorian மக்கள் நல விசாரணை அதிகாரி கண்டறிந்துள்ளார்.

கடந்த ஜூலை 4-ஆம் தேதி கொரோனா தொற்று கட்டுக்கடங்கா வண்ணம் அதிகரித்ததை அடுத்து, வடக்கு Melbourne மற்றும் Flemington -ல் திடீரென அவசரகால முடக்கம் உண்டாக்கப்பட்டது. இது குடியிருப்போர் மனித உரிமைகளை மீறியதாக உள்ளது என பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மக்கள் நல விசாரணை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

அங்கு குடியிருப்போர் சம்பந்தப்பட்டவர்களுக்கு, கொரோனா தொற்று திடீரென தோன்றியதால், 9 Towers-ல் இருந்த 3000-க்கும் மேற்பட்டோர் 5 நாட்களாக வெளிவர தடை விதிக்கப்பட்டிருந்தது. போதுமான அளவில் முன்னெச்சரிக்கை ஏதும் இல்லாமல், திடீரென இந்த முடக்கத்தை அறிவித்ததால் அரசு இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மக்களை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட அத்தியாவசியமான மற்றும் கஷ்டமான நடவடிக்கைக்காக அரசு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் ஆரோக்கியம் பற்றி எந்தக் கவலையும் இன்றி எடுக்கப்பட்டு இந்த திடீர் அறிவிப்பு அரசின் தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 4-ஆம் தேதி தோன்றிய திடீர் கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்துதல் அவசியம் என்றும், ஆனால் அங்கு வசிப்பவர்களுக்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்படும் என்று தாங்கள் எதிர்பார்த்தாகவும், மூத்த சுகாதார அதிகாரிகள் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

ஆனால் அன்று மதியமே முடக்குதல் பற்றிய அறிவிப்பு Premier Daniel Andrews-ஆல் வெளியிடப்பட்டது. அன்று மதியம் நடைபெற்ற நெருக்கடிக்கால அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடக்குதலுக்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது . இந்த அமைச்சரவை கூட்டம் நடந்ததற்கான ஆதாரங்கள் தனக்கு மறுக்கப்பட்டதாகவும் Ms. Glass தெரிவித்துள்ளார்.

அங்கு குடியிருந்தோர் பலருக்கு இந்த முடக்குதலை பற்றி எதுவும் தெரியாது என்றும், எந்த காரணத்திற்காக இந்த முடக்குதல் நடைபெற்றது என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் Ms.Glass தெரிவித்துள்ளார் .கொரோனா முடக்கம் ஆரம்ப கால நாள்கள் மிகவும் குழப்பமானதாக இருந்ததாகவும், பலர் உணவு மற்றும் மருந்து இல்லாமல் கஷ்டப்பட்டார்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 33 Alfred Street உள்ள Tower-ல் வசித்தவர்கள் ஒரு வாரத்துக்கு பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதால் மிகவும் கஷ்டத்துக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து, Nappies , பால் உட்பட சில அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாக அங்கு வசிப்பவர்கள் கூறியிருந்தனர். குடியிருப்பில் வசித்த 7 நபர்களின் தாயான அமீனா என்பவர், இந்த சூழ்நிலையினால் கோபத்துடனும், மனமுடைந்தும் காணப்பட்டார். இரண்டு படுக்கை அறையில் 8 பேர் தங்கி இருந்ததாக அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

தங்களின் மன வேதனையும் பயத்தையும் புகார்களாக,மக்கள் நல விசாரணை அதிகாரியிடம் அங்கு குடியிருப்போர் சமர்ப்பித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் மன நல அமைப்புகளிம் உதவி கேட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 8 Tower-களில் வசித்தவர்களுக்கு, 5 நாட்களுக்கு பின் தளர்வுகள் கொடுக்கப்பட்டன. ஆனால் 33 Alfred Street-ல் பரவல் அதிகமாக இருந்ததால், அங்கிருந்தவர்களுக்கு 9 நாட்களுக்கு பின்னரே,தளர்வுகள் கொடுக்கப்பட்டன.

மனித உரிமை பாதிப்புகள் உட்பட பல வழிகாட்டுதலை பரிசீலிப்பதற்கும், கையொப்பம் இடுவதற்கும் தனக்கு 15 நிமிடமே கால அவகாசம் இருந்ததாகவும், உடனடி முடக்குதலில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் Victoria ‘s Acting Chief Health Officer தெரிவித்திருந்தார்.

இந்த முடக்குதல், சட்டத்திற்கு எதிரானதாக இருந்தது மற்றும் மனித உரிமைகளை மீறியதாக இருந்தது என்பதை Victorian அரசு ஒப்புக் கொள்ளவில்லை என்று தனது அறிக்கையில் இந்த அதிகாரி தெரிவித்துள்ளார் . மனநல அறிவுரையின்படி , இந்த குடியிருப்பு பகுதிகளில் முடக்குதல் முடிவு எடுக்கப்படவில்லை என்பதை Victorian Housing Minister Richard Wynne மறுத்துள்ளார்.

அனைத்து சட்ட விதிகளை பின்பற்றியே இந்த அரசு செயல்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார் .மக்களை பாதுகாக்க சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இது இருந்ததாக தான் நினைப்பதாகவும், மக்கள் உயிரை காப்பாற்றியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் .சுகாதார ஆய்வாளர்களை விமர்சனம் செய்வதற்காக இந்த விசாரணை நடைபெறவில்லை என்றும், மக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு இந்த முடிவு இருந்திருக்க வேண்டும் என்று தான் கருதுவதாகவும் Ms.Glass தெரிவித்தார். நெருக்கடியான காலகட்டம் உருவாகும் போது, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும், நாம் எப்படி நடத்தப்படுகிறோம் என்ற கட்டமைப்பை உருவாக்குவது நியாயமான சமுதாயத்தின் ஒரு கடமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.