Breaking News

Melbourne விமான நிலையத்தில் இருந்து 17 நியூசிலாந்து பயணிகள் வெளியேறி உள்ளனர் !

12க்கும் மேற்பட்ட நியூசிலாந்து பயணிகள் Melbourne விமான நிலையத்தை விட்டு வெளியேறி சிட்னி வழியாக சமூகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது தமக்கு ஏமாற்றத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக Victorian Premier Daniel Andrews தெரிவித்தார்.

Trans-Tasman பயணிகளில் முதல் குழுவில் இருந்து 17 பயணிகள் ஆஸ்திரேலியாவில் வெள்ளியன்று தரையிறங்கினர்.அந்த பயணிகள் சிட்னியிலிருந்து Melbourneக்கு இணைப்பு விமானத்தை அடைந்துள்ளனர்.

Melbourne தற்பொழுது வெளி பயணிகளை ஏற்பதில்லை.பயணிகளை தடுத்து வைப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் அதிகாரிகளுக்கு இல்லை என்று விக்டோரிய சுகாதர மற்றும் மனித சேவை துறை திட்டவட்டமாக தெரிவித்தது.

மேலும் விக்டோரியா நியூசிலாந்துடன் Travel Bubble ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொள்ளவில்லை.NSW அந்த ஏற்பாட்டை செய்ததால் சர்வதேச பயணிகளின் வரவை எதிர்பார்க்கவில்லை என்று DHHS அறிக்கை தெரிவிக்கிறது.

இது விக்டொரிய அதிகாரிகளின் முடிவு இதில் கருத்து சொல்ல முடியாது என ஆஸ்திரேலிய எல்லை படை தெரிவித்துள்ளது.பயணிகள் விமான நிலையத்தில் இருந்து சில நிமிடங்களில் வெளியேறினர்.பயணம் செய்த 17 பயணிகளுக்கும் ABF பயணி அட்டைகளை வழங்கும் என மாநில அரசு காத்துக்கொண்டிருந்த்து என்று திரு Andrews தெரிவித்தார்.

அந்த விவரங்கள் கிடைத்த உடன் ஒவ்வொருவராக பார்வையிட்டு அவர்கள் விக்டோரிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்கிறார்களா என்பது பரிசோதிக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் திரு. Andrews தெரிவித்தார்.

இந்த மக்கள் யார், எங்கு இருக்கிறார்கள், அவர்கள் பயணத்தின் காரணம் என்ன, விக்டோரியாவின் விதிமுறைகள் அவர்களுக்கு தெரியுமா, இது போன்ற விவரங்கள் இல்லதது தமக்கு வருத்தம் அளிப்பதாக Andrews தெரிவித்தார்.

மேலும் உள்வரும் பயணிகளுக்கான அட்டைகளை digital முறையில் மாற்றுவதற்கான திட்டத்தை immigratin Minister Alan Tudge அறிவித்தார்.கொரோனா பேரிடரை சரியாக கையாள்வதில் தவறியாதால் அதிலிருந்து திசை திருப்பவே திரு Andrews இந்த சம்பவத்தை பயன்படுத்துவதாக திரு Tudge குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில் கோவிட் கட்டுப்பாட்டால் வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்கள் அடுத்த வாரம் நாடு திரும்புகிறார்கள்.
நாட்டின் quarantine capacity அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் வடக்கு மாகாணமும் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி டார்வினுக்கு தெற்கே இருக்கும் சுரங்கப் பாதையை திரும்பிய பயணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட ஒப்பந்தம் மார்ச் மாதம் வரை நீடிக்கும். அதுவரை 5000 பேர் Howard Spring-ல் உள்ள தனிமைப்படுத்தபட்ட வசதியை பயன்படுத்தலாம்.

மேலும் 29,000-ற்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்ப முயற்சி செய்கின்றனர்.அதில் 3000 பேர் பலவீனமானவர்கள். அவர்களுக்கு விமானங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.