Breaking News

சிட்னியில் அதி தீவிர கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் : தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை

Measures aimed at controlling the spread of extreme corona in Sydney. Epidemiologists warn

சிட்னியில் Super Spreading Event எனப்படும் அதி தீவிர தொற்றுப் பரவலை தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு்ள்ளதாகவும், ஆனால் பாதிக்கப்பட்ட சிலரின் தொடர்புச் சங்கிலி விடுபட்டுள்ளது கவலையை ஏற்றபடுத்த உள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் Mary-Louise McLaws கூறியுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் உள்ளூர் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும், அதே நேரத்தில் சிட்னி ஊரக பகுதியை சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவரின் தொற்று பாதிப்புக்கான காரணங்களை கண்டறிவது மிகவும் சிக்கலாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Measures aimed at controlling the spread of extreme corona in Sydney, Epidemiologists warnடார்லில் ஹார்பரில் உள்ள பார்க் ராயல் விடுதயில் தங்கியுள்ள அமெரிக்க பயணியின் தொடர்பில் ஏதேனும் அந்த நபர் வருகிறாரா்என்றும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆய்வகத்தில் விடுபட்ட சங்கிலித் தொடர்பை கண்டறிவதற்கான தீவிர முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டு்ள்ளனர். அது வெளிநாட்டு பயணிகள் மற்றும் சிட்னி நபரிடையே ஆனது தான் என்ற அடிப்படையில் ஆய்வை தொடர்ந்து வருகின்றனர். இதனிடேயே பாதிக்கப்பட்ட அந்த நபரின் மனைவிக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு்ள்ளது.

Maryபாதிக்கப்பட்ட நபரோடு தொடர்பில் இருந்தவர்களை QR கோட் மூலமாக கண்காணித்து அவர்களில் யாரேனும் இருக்கிறார்களா என்றும், வெளிநாட்டவர் தங்கியிருக்கும் விடுதி பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு நடத்திய சோதனையில் ஏதேனும் தவறான முடிவுகள் வந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக தொற்று நோயியல் நிபுணர் Mary-Louise McLaws கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அமெரிக்க பயிணிகளோடு அதே விமானத்தில் பயணம் செய்து விடுதி தனிமைப்படுத்துதலில் இல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் நபர்களையும் கண்டறிந்து அவர்களிடமும் சோதனை நடத்த வேண்டும் என்றும் நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில் இது ஒரு (சூப்பர் ஸ்பெரட்டிங்) அதி தீவிர தொற்று பரவல் நிகழ்வாக மாறாது என்றும், வடக்கு பகுதியை போல கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் Mary-Louise McLaws தெரிவித்துள்ளார்.

விடுதி தனிமைப்படுத்துதல் சரியான தீர்வாக அமையாது என்றும், அது தொற்று பரவலுக்கு வழி வகுக்குகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். வெளிநாட்டு எல்லைகளை மூடி வைப்பதே தொற்று பரவலை தடுக்க சரியான தீர்வு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் இதை விட கடுமையான பெருந்தொற்றை சந்திக்கும் நிலைக்கு தயாராக உள்ளனர் என்றும், பயோ செக்யூரிட்டியை அதிகரிக்க வேண்டும் என்பதை கொரோனா தாக்கம் உணர்த்தி இருப்பதாகவும் மற்றொரு தொற்று நோயியல் நிபுணர் ஏஞ்சலா வெப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://cutt.ly/8bRZitx