Breaking News

MCG Boxing Day Test மற்றும் சாட்ஸ்டோன் ஷாப்பிங் சென்டரில் Melbourne மர்ம தொற்றுகள் கலந்து கொண்டதால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !

Chadstone ஷாப்பிங் சென்டரில் நடந்த Boxing Day விற்பனை மற்றும் MCG-ல் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட ஒருவர் கொரோனா வைரஸ் சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Chadstone மற்றும் MCG ஆகியவை பரவுவதற்கு சாத்தியமான இடங்களாக இருக்கும் நிலையில், அவர் வந்திருக்கும் போது வைரஸ் பரவி இருக்கும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது நவம்பர் மாத தொடக்கத்தில் வந்த முதல் வித்தியாசமான தொற்று, மேலும் சோதனை மையங்களில் இது அதிக சிரமத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் சோதனை தொற்றுக்கான மாதிரிகளை சமர்பிக்க வலியுறுத்துகின்றனர்.

Great Southern Stand -இல் ஐந்தாவது கேலரியில் அமர்ந்திருந்த அனைவரும் அன்று மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற முடிவை பெறும் வரை சோதனை செய்து சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் மைதானத்தின் டிக்கெட்டில் உள்ள விரிவான தகவல்களின் அடிப்படையில் புதன்கிழமை அன்று அவர்களுக்கு குறுஞ்செய்தி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு Weimar, டெஸ்டில் ஐந்தாவது கேலரியில் இருந்த 7000 – 8000 ரசிகர்களை இந்த தொற்று பாதிக்கும் என மதிப்பிடுகிறார்.பேராசிரியர் Cheng அறிகுறிகள் தோன்றுவதற்கு 5 முதல் 6 நாட்களில் “Upstream contacts” வேறு படுத்துவது குறித்து சுகாதார அதிகாரிகள் மிகவும் அக்கறைக் கொண்டுள்ளனர், என்று கூறினார்.மாநிலத்தில் மொத்தம் 41 கொரோனா தொற்றுகளாக உயர்ந்துள்ளது .

விக்டோரியன் அரசாங்கம் புதன்கிழமை வேலைக்கு திரும்பும் மக்கள் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக வேலைக்கு வரவேண்டாம் என அறிவித்தது. மேலும் பொது சேவைகள் திங்கள்கிழமை முதல் பணிக்கு திரும்புவதற்கான அடுத்த கட்டத்திற்கு செல்லவிருந்தது. இதற்கு முன் 25 சதவீதமாக உயர்த்தியது, இனி பிப்ரவரி 8 முதல் 50 சதவீதமாக உயர்த்த மேம்படுத்தப்படும் என்று அறிவித்தது. வணிக அலுவலகங்களுக்கு ஜனவரி 11 முதல் 50% வரை பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவித்தது.