Breaking News

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவில் இயங்கும் தன்னுடைய அனைத்து கிளைகளையும் மூடப்படும் என மெக்டோனால்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

McDonald's has announced that it will close all its branches in Russia in protest of the invasion of Ukraine.

உக்ரைனில் ரஷ்யாவில் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள், ஜெனரல் மோட்டார்ஸ் போன்றவை ரஷ்யாவை விட்டு வெளியேறி வருகின்றன.

ரஷ்யாவின் பிரபல துரித உணவகமான மெக்டோன்லாடு அங்குள்ள தனது 847 கிளைகளை தற்காலிகமாக மூடிட முடிவு செய்துள்ளது. சோவியத் யூனியனில் முதன்முதலில் கால்பதித்த அமெரிக்க நிறுவனம் என்கிற பெருமை மெக்டோனால்டுக்கு உண்டு.

McDonald's has announced that it will close all its branches in Russia in protest of the invasion of Ukraine..கடந்த 1990-ம் ஆண்டு தன்னுடைய முதல் கிளையை ரஷ்யாவில் அமைத்தது மெக்டோனால்டு. அதை தொடர்ந்து அந்நாட்டு மக்களிடையே மெக்டோனால்டு உணவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து இப்போது வரை அம்மக்களால் மெக்டோனால்டு உணவுகள் பெரிதும் விரும்பப்பட்டு வருகின்றன. முன்னதாக உக்ரைனில் இயங்கும் 108 கிளைகளை மெக்டோனால்டு முடியது. எனினும், அங்கு தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் என மெக்டோனால்டு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3wflKyC