Breaking News

அவமானகரமான கருத்துக்களை கூறும் Margaret Court-க்கு ஆஸ்திரேலியா தினத்தன்று வழங்கப்படும் மிக உயர்ந்த கவுரம் தகுதியற்றது -Dan Andrews விமர்சனம் !

மிக மோசமான மற்றும் பிறருக்கு வருத்தத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்துகிற வகையில் அவமானகரமான கருத்துக்களை கூறும் Margaret Court -க்கு ஆஸ்திரேலியா தினத்தன்று வழங்கப்படும் மிக உயர்ந்த கவுரம் தகுதியற்றது என Dan Andrews விமர்சித்துள்ளார். செவ்வாயன்று ஆஸ்திரேலியா தினத்தன்று வழங்கவுள்ள கவுரவ பட்டியலில் முன்னால் டென்னிஸ் வீரர் மார்கரெட் கோர்ட்-ன் பெயரும் இடப்பெற்றுள்ள செய்தி ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Margaret Court's

Margaret CourtMargaret Court ஏற்கனவே  2007 ம் ஆண்டில் Officer of the Order of Australia  விருதை பெற்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அவருக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த விருதை வரும் செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியா தினத்தன்று வழக்கப்படவுள்ளது.

ஓரின சேர்க்கை திருமணம் மற்றும் ஓரின சேர்க்கைக்கு எதிராக Margaret Court தெரிவித்த கருத்துக்களால் கடந்த சில ஆண்டுகளில் அவர் பல விமர்சனங்களுக்கு ஆளாகினார். இதனிடையே LGBTQI community மக்களின் உரிமைகள் குறித்த Margaret Court -ன் நிலைப்பாட்டை காரணமாக கருதி தற்போது கொடுக்கப்படும் ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த கவுரவத்துக்கு அவர் தகுதியானவர் என தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அதை நம்பவில்லை என்றும் Dan Andrews வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம்  கூறியுள்ளார்.

இதையடுத்து  இந்த விருதை தான் பெற போவது குறித்து எந்த ஒரு விமர்சனங்களையும் கேள்விப்படவில்லை எனவும், இந்த விருதை பெறுவதில் தான் மிகவும் பெருமைப்படுவதாகவும், இது தனக்கு கிடைக்கும் பெரிய மரியாதை என்றும் Margaret Court கூறியுள்ளார்.

நான் இங்கு என் பணிக்காகவோ, என்னுடைய மதிப்பிற்காகவோ இல்லாமல் , எனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், பெரும்பான்மையான விக்டோரியர்களை நினைத்தும் தான் நான் இருக்கிறேன். ஆனால் அவர்கள் அந்த வகையான வெறுக்கத்தக்க அணுகுமுறையை ஆதரிக்கவில்லை.” மேலும் ஆஸ்திரேலியா தின நாளில் கவுரவிக்கப்படுவோரின் பெயர்கள் முன்கூட்டியே ஊடகங்களுக்கு வெளியிடப்படும்.

ஆனால் தற்போது ஜனவரி 26 வரை வெளியிடப்படவில்லை. இதனிடையே மார்கரெட் கோர்ட் பற்றிய செய்தி வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் ஒரு மெல்போர்ன் ஒளிபரப்பாளரால் வெளியானது. இதுபற்றி கேட்ட போது, ஸ்காட் மோரிசன் தனக்கு இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு  ஏதும் இல்லை என கூறியுள்ளார்.  ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அந்தோணி அல்பானீஸ் இந்த நடவடிக்கை குறித்து விமர்சித்துள்ளார்.

24 Grand Slam singles பட்டங்களை பெற்ற Margaret Court ,  LGBTQI சமூகம் குறித்த தனது கருத்துக்கள் தொடர்பாக சமீபத்திய ஆண்டுகளில் சர்ச்சைக்குள்ளானார். இவர் 2013 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் கேசி டெல்லாக்வாவின் குழந்தை ஒரே பாலின உறவில் பிறந்தது என ஒரு செய்தித்தாளுக்கு ஒரு கடிதம் எழுதினார். மேலும் அதில், “தனிப்பட்ட முறையில், கேசி டெல்லாக்வாக்கு எதிராக எனக்கு எதுவும் இல்லை,” என்றும்  அவர் எழுதினார்.

2017 ஆம் ஆண்டில், குவாண்டாஸை ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரிப்பதாக அவர் புறக்கணித்தார். இதனிடையே  பெயரிடப்பட்ட ஒரு அரங்கிற்கு பெயர் மாற்றம் செய்ய 2018 ஆம் ஆண்டில் அவருக்கு அழைப்புகள் வந்தன. அப்போது  அவர் அமைச்சராக இருந்த நிலையில் Pentecostal தேவாலயத்தில் டிரான்ஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் டிரான்ஸ் நபர்களை அவர் கண்டித்துள்ளார்.

Dan Andrews விக்டோரியர்களில் வாழும் பெரும்பான்மையானோர் வெறுக்கத்தக்க அணுகுமுறையை ஆதரிக்கவில்லை. மாறாக  அவர்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து மரியாதையுடனும் வாழ  விரும்புகிறார்கள். மேலும் மக்கள் பாதுகாப்பாக வாழக் கூடியவர்களைப் பார்க்கவும்  விரும்புகிறார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது என Dan Andrews கூறியுள்ளார்.