இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த பிறகு, மெல்ல மெல்ல மீண்டு வந்த ஜப்பான் மீதுஷ்யா போர் தொடுத்தது. அப்போது அந்நாட்டின் எல்லையில் இருந்த எட்ரோஃபூ, குனாஷிரி, ஹபோமை மற்றும் ஷிகோதன் தீவுகளை ரஷ்யா கைப்பற்றிக் கொண்டது.
அதை தொடர்ந்து ரஷ்ய குடியுரிமையை மறுத்த அப்பகுதி மக்கள் வலுக்கட்டாயமாக ஜப்பானுக்கு ரஷ்ய படைகளால் விரட்டப்பட்டன. இதனால் நாடு இழந்து, தேசம் இழந்து பலரும் ஜப்பானுக்கு குடிபெயர்ந்தனர்.
தற்போது ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரேனியர்கள் பலர் போலாந்து நாட்டுக்குள் தஞ்சமடைந்து வருகின்றனர். இது தங்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களை நினைவு கூறுவதாக எட்ரோஃபூ தீவை பிறப்பிடமாகக் கொண்ட முதியவர் யமோமத்தோ தெரிவித்துள்ளார். ஜப்பானில் வசிக்கும் யமோமத்தோ கடந்த 1990-ம் ஆண்டு அனுமதி பெற்று, ரஷ்யா வசமுள்ள எட்ரோஃபூக்கு சென்றார். ஆனால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிலப்பரப்பு என்கிற சுவடே தெரியாமல், அந்த தீவு மாறி இருந்ததாக யமோமத்தோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யா குறிப்பிட்ட நான்கு தீவுகளை கைப்பற்றியுள்ளதன் மூலம், பசிஃபிக் பெருங்கடலில் தன்னுடைய ஆளுகையை செலுத்த தொடங்கியது. அங்கு போர் நடவடிக்கைகளை மேற்கொள்வது, ஏவுகணைகளை சோதனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து வருத்தம் கூறிய யமோமத்தோ , ஜப்பான் மீது ரஷ்யா போர் தொடுத்ததுக்கு காரணம் இருந்தது. ஆனால் இப்போது ரஷ்யா தனது அண்டை நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டினர் ரஷ்யாவுக்கு சகோதர சகோதிரிகளை போன்றவர்கள். ரஷ்ய நாடு செய்துள்ளது மனித இன மாண்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது என்று கண்டனங்களை அவர் பதிவு செய்தார்.