Breaking News

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 நபர்களுடன் தொடர்பிலிருந்த காரணத்தால் பெர்த் பகுதியிலுள்ள மருத்துவமனை ஊழியர்கள் பலரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Many hospital staff in the Perth area have isolated themselves due to contact with 2 people suffering from corona infection..

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மாகாணத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் நோய் தாக்குதலுக்கு ஆளானார். இவர் பல்வேறு இடங்களில் நடந்த நோய் பரவலுக்கு காரணமானவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Many hospital staff in the Perth area have isolated themselves due to contact with 2 people suffering from corona infection.அதேபோல மற்றொருவர் 60 வயது மதிக்கத்தக்கவர். எனினும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர். முறையாக தனிமைப்படுத்துதலை பின்பற்றாத காரணத்தால், இவரிடம் இருந்து பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சர் ஆம்பர் ஜேட், தொற்று பாதித்த இருவரும் ஃபியோனோ ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ளனர். இவர்களிடம் இருந்து 12 மருத்துவமனை ஊழியர்களுக்கு தொற்று பரவியுள்ளது. கொரோனா பாதித்த அவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Many hospital staff in the Perth area have isolated themselves due to contact with 2 people suffering from corona infectionமொத்தம் 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஊழியருக்கும் முறையான பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்கள் பாதுகாப்புடன் பணிக்கு திரும்புவது உறுதி செய்யப்படும். தொடர்ந்து பரிசோதனை நெகட்டிவ் என்று வரும் பட்சத்தில், அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பலாம் என அமைச்சர் ஆம்பர் ஜேட் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3GMX1UX