Breaking News

ஆக்கிரமிப்பு மற்றும் மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மொராக்கோ மீது மேட்ரிட் குற்றச்சாட்டு : கடலில் பாட்டில்களை கொண்டு ஸ்பானிஷ் கடற்கரைக்கு மிதந்து வந்த புலம்பெயர் சிறுவன்

Diaspora boy floats off Spanish coast with bottles at sea

மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரே நாளில் 8,000 பேர் ஸ்பெயினுக்கு வந்துள்ளனர். அதில் ஒருவனான இந்த சிறுவன் பாட்டில்களைக் கொண்டு நீண்ட நேரம் தனியாக கடலில் மிதந்து அழுது கொண்டே கரை வந்து சேர்ந்துள்ளான். இது தொடர்பான வீடியோ காட்சிகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அந்த காட்சிகளில் சிறுவன் பாட்டில்களை கொண்டு கடலில் மிதந்தவாறு அழுதுகொண்டே கரை வந்து சேர்கிறான். அவனை மீட்கும் கடற்படை அதிகாரிகள் அவனிடம் விசாரணை நடத்துகின்றனர்.

இந்நிலையில் எல்லையில் அளவுக்கதிகமான நபர்களை அனுமதிப்பதில் மிரட்டல் போக்கை கையாளுவதாக மீது ஸ்பெயின் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த வாரம் மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் நகரமான சியூட்டாவுக்குள் கடக்க முயன்ற ஆயிரக்கணக்கான மக்களில் இந்த சிறுவனும் ஒருவர். அரசியல் காரணங்களுக்காக ஆப்ரிக்கா வேண்டுமென்றே எல்லையில் காவலர்களை அகற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

Diaspora boy floats off Spanish coast with bottles at sea.மொராக்கோவுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் தலைவருக்கான மருத்துவ உதவிகளை அளிக்க ஸ்பெயின் முடிவு செய்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே ராஜ்ஜிய ரீதியான முடிவுகளை எடுக்கும் சூழல் மிகப் பெரும் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது. சீயாட்டா நகருக்கு புலம்பெயர்ந்தோர் வருவது கடுமையாக மிரட்டல் விடுத்ததாக வியாழனன்று மொராக்கோ மீது ஸ்பெயின் குற்றம்சாட்டி உள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ரப்பர் வளையங்களை பயன்படுத்தி எல்லையை கடந்து கடல்வழியாக ஸபெயின் உறைவிடத்திற்கு வரும் நிலையில், கடற்கரையில் ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் வருகை தந்துள்ள 8 ஆயிரம்புலம்பெயர் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஸ்பெயின் முடிவுசெய்துள்ளது. அவர்கள் El Tarajal கடற்கரையிலுள்ள வேர் ஹவுசில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Submitted Link: https://bit.ly/2SmkeZy