நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஏற்கனவே போடப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு களில் நாம் அதிக கவனம் செலுத்தினால் புதிய வகை வைரசோடு சேர்ந்து வாழ வேண்டிய நிலை உருவாகிவிடும் என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Brad Hazzard கூறியுள்ளார்.
Fairfield, Liverpool மற்றும் Cantebury-Bankstown ஆகிய பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் போதுமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் சமூகப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே அடுத்த ஒன்பது நாட்களில் ஊரடங்கு நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அக்டோபர் மாதம் வரையிலான நம் வாழ்க்கை முறையை தீர்மானிக்க முடியும் என்று நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார்.
அதிவேக பரவல் தன்மை கொண்ட டெல்டா வகை வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், சிட்னியின் ஊரகப் பகுதிகளில் அதிகரித்திருந்த தொற்று பாதிப்பு தற்போது நகரப் பகுதிகளிலும் சமூக பரவல் மூலமாக பரவி வருவதாகவும், துறைமுகப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் தலைமை சுகாதார அதிகாரி Kerry Chant கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 13 பேர் மட்டுமே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே மேலும் சமூக பரவல் மூலமாக தொற்று அதிகரிக்கும் அச்சம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போதுவரை 347 பேர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
ஊரடங்கு காலம் தொட்டு பாதிப்பை கட்டுப் படுத்துகிறது என்றும் எனவே தான் அடுத்த ஒன்பது நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு பட்டிருப்பதாகவும் நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Gladys Berejiklian Chant கூறியுள்ளார். எனவே இந்த காலகட்டத்தில் போதுமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டிருப்பவர்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் ஆகியவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே நேரத்தில் தடுப்பூசி நடவடிக்கையை தீவிரப்படுத்தும் பணியையும் நியூ சவுத் வேல்ஸ் முடுக்கி விட்டுள்ளது தலைமை சுகாதார அதிகாரி, ப்ரீமியர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த வாரம் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவிப்புக்குப் பின்னர் 8 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3qUG1Vv