Breaking News

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மன்னிபுக் கோரி தனக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்புகளில் இருந்து மக்களவை உறுப்பினர் ஜார்ஜ் கிறிஸ்டன்சன் விலகிக்கொண்டார்.

சமூகவலைதளத்தில் ஜார்ஜ் கிறிஸ்டன்சன் சமீபத்தில் ஒரு ஆடியோ பாடு காஸ்ட் வெளியிட்டு இருந்தார். அதில், ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பேசியிருந்தார். இது அரசியல் களத்திலும், சமூகவலைதளங்களிலும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

Lok Sabha member George Christensen has apologized for his controversial remarks about children being vaccinated against coronavirus.இதையடுத்து, தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்ப் தெரிவித்துக்கொண்ட கிறிஸ்டன்சன், மக்களவையின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கான கூட்டு நிலைக்குழுவின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மக்களவை உறுப்பினர் கிறிஸ்டன்சன் கருத்து ஆபத்தானது என்று கருத்துக் கூறிய பிரதமர் ஸ்காட் மாரீசன், ஆனால் தன்னுடைய கருத்தை தெரிவிக்க அவருக்கு முழு உரிமை உண்டு என்று கூறினார். அதேசமயத்தில் அவருடைய கருத்து அரசின் கோட்பாட்டு விதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.

கொரோனா தடுப்பூசி குறித்த தன்னுடைய விமர்சனங்களை ஜார்ஜ் கிறிஸ்டன்சன் முன்வைத்து வருவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக அடுத்தமுறை நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா பாராளுமன்ற தேர்தலில் லிபரல் தேசியக் கட்சி சார்பாக கிறிஸ்டன்சனுக்கு போட்டியளிக்க வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://ab.co/3Ks68N6