நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் சர்வதேச விமானசேவைக் குழுவினரை 60 வயது ஓட்டுநர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. Bondi பகுதியில் புதிதாக பரவும் தொற்று என்பதால் இதனை Bondi Cluster என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்றுப்பரவல் பாதிப்பு கொண்ட இடங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அந்த வகையில் மேற்கு சிட்னியின் ஊரகப்பகுதிகள் வரை பல்வேறு இடங்களை உள்ளடக்கிய Leichhardt, Castle Hill, Fairy Meadow in the Illawarra, Merrylands and Campbelltown பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் தொற்றுப்பரவல் பாதிப்பு இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட ஓட்டுநர் சென்றிருந்த இடமொன்றிற்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரும் சென்றிருந்ததாகவும், இருவரும் மிகக்குறுகிய நேரமே தொடர்பு எல்லைக்குள் இருந்தபோதிலும் இவ்வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டதாகவும் நியு சவுத்வேல்ஸ் ப்ரீமியர் Gladys Berejiklian தெரிவித்தார்.
இதனையடுத்து ஜீன் 11ம் தேதி முதல் 18ம் வரை இருவரும் சென்று வந்த இடங்களின் பட்டியல் மற்றும் நேரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த இடங்களுக்க சென்று வந்தவர்கள் தங்களை உடனடியாக 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் கோவிட் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொற்றுப்பரவல் மற்றும் பாதிப்பு அதிகமுள்ள இடங்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பான பல்வேறு தகவல்கள் சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், அதனை பின்பற்றி குறிப்பிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொண்டோர் தங்களக்கு லேசான அறிகுறிகள் இருந்தாலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ப்ரீமியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே சிட்னி பெருநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் ப்ரீமியர் Gladys Berejiklian கோரிக்கை விடுத்துள்ளார்.
Link Source: https://ab.co/3wWunvm