Breaking News

கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவராகும் லிசா ஸ்தாலேக்கர்..!!

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஃபிகா-வின் தலைவராக தேர்வு.

Lisa Sthalekar is the first female president of the Cricketers' Federation

நியூசிலாந்தில் நடந்த கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிகெட் வீரர்கள் கூட்டமைப்பின் தலைவராக கிரிக்கெட் வீராங்கனை லிசா ஸ்தாலேக்கர் என்கிற பெண் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியக் கிரிக்கெட் மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனையான லிசா ஸ்தாலேக்கர், கேப்டனாகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு இவரது தலைமையிலான அணி உலகக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

Lisa Sthalekar is the first female president of the Cricketers' Federation.ஸ்விட்சர்லாந்து நாட்டில் சர்வதேச கிரிகெட் வீரர்கள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், வீராங்கனை லிசா ஸ்தாலேக்கர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் இக்கூட்டமைப்பின் தலைவராகியுள்ளது இதுவே முதல்முறையாகும். இதுதொடர்பாக பேசிய லிசா ஸ்தாலேக்கர், உலகம் முழுவதும் தற்போது கிரிக்கெட் விளையாடப்படுகிறது. கிரிக்கெட் தனக்கான பாதையில் சிறப்பாக பயணித்து வருகிறது. அதற்கு சரியான பங்களிப்பை தரும் வகையில் இப்பதவியை ஏற்பது மகிழ்ச்சியாகவுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஐசிசி-யுடன் இணைந்து வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், உறுதிப்படுத்தவும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உலகளவிலுள்ள அனைத்து கிரிக்கெட் வீரர் வீராங்கனைகள் ஆரோக்கியமான வழிமுறைகளை பின்பற்றும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று லிசா ஸ்தாலேக்கர் தெரிவித்தார்.

சர்வதேச மகளிரி கிரிக்கெட் போட்டியில் 2001 முதல் 2013-ம் ஆண்டு வரை முதல்நிலை வீராங்கனையாக வலம் வந்தார் லிசா ஸ்தாலேக்கர். இவர் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது, 8 டெஸ்டு, 124 ஒருநாள் போட்டிகள், 54 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளன.

உலகளவில் கிரிகெட் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மதிப்புமிக்கதாக கருதப்படும் பெலிண்டா கிளார்க் விருதை வீராங்கனை லிசா ஸ்தாலேக்கர் ஒருமுறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.