Breaking News

பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இருந்து கண்ணீரோடு விடை பெற்றார் லயொனல் மெஸ்ஸி : எதிரணியான பிரென்ச் கிளப்பில் இணைவதற்கு நடக்கும் பேச்சுவார்த்தை

Lionel Messi bids farewell to Barcelona Football Club. Negotiations to join rival French club

அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்சி தனது 20 ஆண்டு கால பயணத்தை முடித்துக்கொண்டு பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப்பில் கண்ணீரோடு இருந்து விடைபெற்றார். பார்சிலோனாவின் கேம்ப் நவ் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் மல்க அவர் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.

Lionel Messi bids farewell to Barcelona Football Club. Negotiations to join rival French club,.பார்சிலோனா கிளப் வழியில் தொடர்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொண்டதாகவும் ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும் மெஸ்ஸி கூறியுள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பார்சிலோனா கிளப் அணி தனது வீரர்களுக்கான சம்பள உச்சவரம்பை வெகுவாக குறைத்துள்ளது. இதன் காரணமாக மெஸ்ஸியுடன் புதிய ஒப்பந்தம் போட முடியாமல் தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக மெஸ்ஸியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை என்பதை அதிகாரபூர்வமாக பார்சிலோனா கிளப் நிர்வாகம் அறிவித்தது.

பார்சிலோனா கிளப் அணி மிகப் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும் மெஸ்ஸி அங்கேயே தொடரும் பட்சத்தில் அவருக்கு உரிய சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும் கிளப் நிர்வாகம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. மெஸ்ஸிக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபச்சார விழாவில் அவரது நண்பர்கள் மற்றும் கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Lionel Messi bids farewell to Barcelona Football Club. Negotiations to join rival French club.,பார்சிலோனா அணியை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லப்பட்ட போது தன் இரத்தமே உறைந்து போனதாகவும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றும் மெஸ்ஸி நெகிழ்ச்சியுடன் கூறினார். தமது வாழ்வின் மிக கடினமான காலகட்டம் இது என்றும் தனது அடுத்த கட்ட பயணத்தை தான் உரிய முறையில் தொடருவேன் என்றும் மெஸ்ஸி கூறினார். பார்சிலோனா கிளப் அணியுடனான 20 ஆண்டு கால வரலாற்றுப் பயணம் முடிவுக்கு வரும் நிலையில் மெஸ்ஸி அடுத்ததாக எந்த அணியில் இணையப் போகிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்துடன் எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நேரடியாக எம்எஸ்சி எந்த பதிலையும் அளிக்கவில்லை.

ஆனால் பார்சிலோனா கிளப் அணியின் நேர் எதிர் அணியான பாரீஸ் பிரெஞ்ச் கிளப் அணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், அது உரிய முறையில் முடியும் பட்சத்தில் அந்த அணியில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் மெஸ்சி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Lionel Messi bids farewell to Barcelona Football Club. Negotiations to join rival French club.அதே நேரத்தில் மீண்டும் எந்த நேரத்திலும் பார்சிலோனா அணிக்கு சில நாட்கள் கழித்து திரும்ப முடியும் என்று தான் நம்புவதாகவும், உலகின் மிகச் சிறந்த வீரர்களை இந்த அணிக்கு அழைத்து வர வேண்டும் என தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார். கடந்த ஆண்டு என்ன நடந்தாலும் தான் இந்த அணியை விட்டு வெளியேற மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்ததாகவும் ஆனால் தற்போது சூழல் மாறிவிட்டதாகவும் அவர் கண்ணீர் மல்க கூறினார். தனது 26வது வயதில் பார்சிலோனா கிளப் அணியில் இணைந்த மெஸ்ஸி 34 வயது வரை தொடர்ந்து அந்த அணிக்காக விளையாடிய பெருமைமிகு வீரர் என்கிற உச்சத்தை அடைந்தார்.

Link Source: https://ab.co/2U15H6Q