Breaking News

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மோசமடையும் மக்களின் இயல்பு வாழ்க்கை : எரிபொருள் வாங்குவதற்காக 12 மணிநேரம் வரிசையில் நின்றவர்களில் இதுவரை 7 பேர் உயிரிழப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அனைத்து பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

Life in Sri Lanka worsens due to economic crisis. 7 killed so far in queue for 12 hours to buy fuel..மேலும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை மக்கள் 12 மணி நேரம் வரிசையில் காத்திருந்து எரிபொருள் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இலங்கையில் கடும் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் தங்கள் அன்றாட இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாமல் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

உணவகங்களில் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளதாலும் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாகவும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. பொது கழிப்பறையை பயன்படுத்துவதற்கு கூட 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்தள்ளனர்.

Life in Sri Lanka worsens due to economic crisis. 7 killed so far in queue for 12 hours to buy fuel,பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நெருக்கடியான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஆனால் அரசு இது குறித்து கவலை கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் பேப்பர் உள்ளிட்ட மூலப் பொருட்கள் கிடைக்காத காரணத்தால் பெரும்பாலான அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. செய்தித்தாள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அடியோடு முடங்கி உள்ளன.

இலங்கையின் பணவீக்க விகிதம் 18.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடிப்படைத் தேவைகளான பால், அரிசி, மருந்து உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் கடுமையான மின்தடை பெரும்பாலான பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Life in Sri Lanka worsens due to economic crisis. 7 killed so far in queue for 12 hours to buy fuel.கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை அரசு மேற்கொண்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை, வரிவிதிப்பு, கடன் வாங்கும் அளவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்து விட்டதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். உரங்கள் மீதான வரிவிதிப்பு, விலை ஏற்றம் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக இதன் காரணமாக இலங்கையின் முக்கிய ஏற்றுமதியான தேயிலை மற்றும் ரப்பர் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் அரசு உறுதியான எந்த முடிவுகளையும் மேற்கொள்ள முடியாது என்றும், அது தற்போதைய சூழலை மேலும் நெருக்கடியாக மாற்றக் கூடும் என்றும் பாராளுமன்ற செய்தி தொடர்பாளர் Dullas Alahapperuma கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3juHdMy