Breaking News

தமிழ்நாட்டில் 20 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்த கொரோனா தொற்று : தளர்வுகளில் கட்டாயம் பின்பற்றப்படும் இ – பதிவு முறை

Less than 20,000 corona infections in Tamil Nadu, Mandatory e-pass system in relaxation

தமிழகத்தில் இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக இருந்த நிலையில் நாளொன்றுக்கு 36 ஆயிரம் என்ற அதிகபட்ச பாதிப்பை சந்தித்தது. அதே நேரத்தில் ஒரு நாள் உயிரிழப்பு உச்சபட்சமாக 500 -ஐ நெருங்கியது. இதனையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் அதனை பயன்படுத்தி மக்கள் அதிக அளவில் வெளியில் சுற்றித் திரிந்ததால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19 ஆயிரத்து 448 பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 351 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்து 356 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 360 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்திலேயே தோற்றுப் பரவல் அதிகம் இருந்த சென்னையில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது அந்த வகையில் ஒரே நாளில் 1530 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Less than 20,000 corona infections in Tamil Nadu, Mandatory e-pass system in relaxation.தொடர்ந்து உச்சபட்ச பாதிப்போடு கோவை மாவட்டம் முதலிடத்திலும் இதனையடுத்து ஈரோடு மாவட்டமும் உள்ளது குறிப்பிட்ட மாவட்டங்களில் தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தால் முகாம்களுக்கு ஊசி போட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தடுப்பூசி முகாம்களில் இருப்பு இல்லை என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. மத்திய அரசு தமிழகத்திற்கு அளிக்கவேண்டிய தடுப்பூசி தொகுப்பை விரைந்து அளிக்கும் பட்சத்தில் உடனடியாக தடுப்பூசி போடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.