Breaking News

மேற்கு வங்கத்தில் 29 ஆம் தேதி மாலை 7 மணிக்கு 8 ஆம் கட்ட வாக்கப்பதிவு நிறைவடைந்தது மூலமாக 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல்கள் முடிவுக்கு வந்துள்ளது.

Legislative elections in all five states have come to an end with the completion of the 8th phase of polling in West Bengal on the 29th at 7 pm.

இதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தாலும், தேர்தல் முடிவுக்காக மாநில மக்கள் ஏறக்குறைய ஒருமாதம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு
நிலவிவந்தது.

பல முன்னணி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டனர். அதன்படி..

ரிபப்ளிக் – சிஎன்எக்ஸ் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பின்படி தமிழகத்தில் தி.மு.கவுக்கு 160 முதல் 170 இடங்கள் கிடைக்குமென்றும்,
அ.தி.மு.கவுக்கு 58 – 68 இடங்கள் கிடைக்குமென்றும் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 2 இடங்களும் அ.ம.மு.கவுக்கு 4-6 இடங்களும் கிடைக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.

Legislative elections in all five states have come to an end with the completion of the 8th phase of polling in West Bengal on the 29th at 7 pmஏபிபி – சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.கவுக்கு 160 – 172 இடங்களும் அ.தி.மு.கவுக்கு 58 – 70 இடங்களும் மக்கள் நீதி மய்யத்திற்கு 2 இடங்களும் அ.ம.மு.கவுக்கு 2 இடங்களும் மற்றவர்களுக்கு 0- 3 இடங்களும் கிடைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. Today’s Chanakya கருத்துக் கணிப்பில் தி.மு.கவுக்கு 164-186 இடங்களும் அ.தி.மு.கவுக்கு 46 – 68 இடங்களும் மற்றவர்கள் 0 – 8 இடங்களில் வெல்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா டுடே Axis My India நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.கவுக்கு 175- 195 இடங்களும் அ.தி.மு.கவுக்கு 38 – 54 இடங்களும் அ.ம.முகவுக்கு 1-2 இடங்களும் ம.நீ.மவுக்கு 0 -2 இடங்களும் கிடைக்குமெனக் கூறப்பட்டுள்ளது.

இக்கருத்து கணிப்புகளின் படி திமுக ஆட்சியை பிடிக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Link Source: https://bbc.in/3t4Q4aa