Breaking News

முன்னணி செய்தி நிறுவனமான ஏ.பி.சி தன்னுடைய செய்தி சார்ந்த செயல்பாடுகளை சுய தணிக்கை செய்துக்கொள்ள அதன் நிர்வாக குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

Leading news agency ABC has been approved by its board of directors to self-audit its news activities.

ஆஸ்திரேலியாவின் பிரபலமான செய்தி நிறுவனமாக ஏ.பி.சி திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு செய்தி நிறுவனமும், செய்திகளை வெளியிடும்போது விமர்சனங்களையும், வரவேற்பையும் பெறுவது இயல்பானது.

மக்களின் பாராட்டுகளை மகிழ்ச்சியுடன் ஏற்கும் நிறுவனங்கள், விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதில் முனைப்பு காட்டுவதில்லை. இந்நிலையில், மக்களின் விமர்சனங்களுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில்,ஏ.பி.சி குழுமம் சுதந்திரமான தனிக்கை குழு ஒன்றை அதன் நிர்வாகம் அமைத்துள்ளது.

Leading news agency ABC has been approved by its board of directors to self-audit its news activities,காமன்வெல்த் தீர்பாயத்தில் அங்கம் வகித்த ஜான் மேக்மில்லன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் எஸ். பி.எஸ் செய்தி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஜிம் கேரலும் இடம்பிடித்துள்ளார். இந்த குழுவின் முக்கிய நோக்கம், ஏ.பி.சி செய்தி நிறுவனம் தனக்கும் வரும் மக்களின் விமர்சனங்களை எவ்வாறு எடுத்துக்கொள்கிறது, இதழியல் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பது போன்ற அம்சங்களை தனிக்கை செய்யும்.

2008-2009 ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே இதே போன்ற தனிக்கை குழுவை ஏபிசி நிறுவனம் அமைத்திருந்தது.

Leading news agency ABC has been approved by its board of directors to self-audit its news activitiesஅந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில், ஏ.பி.சி குழுமத்தின் பத்திரிக்கை செயல்பாடுகளின் அடிப்படை கட்டமைப்பு பலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே போன்றதொரு சுய தனிக்கை குழு ஒன்றை ஏ.பி.சி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2022 க்குள் தன்னுடைய அறிக்கையை நிர்வாகத்திடம் இக்குழு சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3jdo01U