Breaking News

பாலி குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஜீமா இஸ்லாமியா அமைப்பை சேர்ந்த முக்கிய நபர் : இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்

Leading member of the Jemaah Islamiyah organization wanted in connection with the Bali bombing. Arrested by Indonesian authorities

2002ம் ஆண்டு ஆஸ்திரேலியர்கள் உட்பட 200க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டதற்கான பாலி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பல்வேறு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அல்கொய்தா அமைப்புடன் இணைந்து, பல்வேறு தீவிரவாத செயல்களில் மூளையாக செயல்பட்ட வரும் பாலி குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய வருமான ஜீமா இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த Abu Rusdan -ஐ இந்தோனேசிய தீவிரவாத தடுப்பு படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தலைநகர் ஜகார்தா அருகே Bekasi-ல் Abu Rusdan உடன் மேலும் சில அமைப்பை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் Ahmad Ramadhan தெரிவித்துள்ளார். ஜீமா இஸ்லாமியா அமைப்பின் முக்கிய மூளையாக செயல்படும் Abu Rusdan பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு பின்னணியில் செயல்பட்டதாகவும், பாலி குண்டுவெடிப்பில் அல் கொய்தா அமைப்புக்கு உதவியதாகவும் காவல்துறை செய்தி தொடர்பாளர் Ahmad Ramadhan தெரிவித்துள்ளார்.

காவல்துறை மேலும் பலரை தேடி வருவதாகவும், பயிற்சி பெற்று புதிதாக தீவிரவாத குழுவில் இணைந்த நபர்களை காவல்துறை சுற்றி வளைக்க திட்டமிட்டுள்ளதாகவும் Ahmad Ramadhan தெரிவித்துள்ளார்.

Leading member of the Jemaah Islamiyah organization wanted in connection with the Bali bombing, Arrested by Indonesian authoritiesஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் பல்வேறு தீவிரவாத குழுக்கள் மற்றும் அல்கொய்தா, ஜமா இஸ்லாமியா உள்ளிட்ட அமைப்புகளுக்கு மூளையாக செயல்படும் நபர்களை தீவிரவாத தடுப்பு படையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், முந்தைய தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர்கள் தற்போது அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதாகவும் இந்தோனேஷிய தீவிரவாத தடுப்பு படை தெரிவித்துள்ளது. அதில் முக்கிய நபராக விளங்கும் Abu Rusdan 2006 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாகவும், ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவால் தடை செய்யப்பட்ட இயக்கமான ஜெமா இஸ்லாமியா அமைப்பு, 2008-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் ராணுவ நடவடிக்கைகளால் கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் பல்வேறு தீவிரவாத அமைப்புகளும் வெளிப்படையாக தங்கள் செயல்பாடுகளை தொடங்கி இருப்பதாகவும், தாலிபான் அமைப்புகளின் உடைய கருத்துகளோடு ஒத்துப்போகும் பல்வேறு தீவிரவாத குழுக்கள் தொடர்ந்து தலையெடுத்து வருவதாகவும் இந்தோனேசிய புலனாய்ப்பிரிவு செய்தி தொடர்பு அதிகாரி Wawan Hari Purwanto கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3AculRJ