Breaking News

பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பல்வேறு உலகநாடுகளின் தலைவர்கள். மவுனத்தில் மூழ்கிய பிரிட்டன்.

இரண்டாம் எலிசபெத் ராணியின் கணவரும், இளவரசருமான எடின்பெர்க் பிலிப் தனது 99 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பிரிட்டனின் பல்வேறு இடங்களில் இளவரசர் பிலிப் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

Leaders of various world nations mourn the death of Britain's Prince Philip. Britain plunged into silence. 3பிலிப் மறைவுக்கும், அரச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கும் பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளும் இரங்கல் தெரிவித்துள்ளன. இளவரசர் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், பல தலைமுறைகளின் இணக்கத்தை பெற்றவர் என்றும், தனிச்சிறப்புடைய வாழ்வியல் மற்றும் பணிச்சூழலையும் பெற்றவர் பிலிப் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஆஸ்தரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கனடா பிரதமர் அலுவலகம் மற்றும் பிரிட்டன் ராணுவத் தலைமையகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இளவரசர் பிலிப் குறித்து பல்வேறு நிகழ்வுகளை நினைவு கூர்ந்து உள்ளனர். அரச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு என்றும், இரண்டாம் எலிசபெத் ராணிக்கு தங்களது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

Leaders of various world nations mourn the death of Britain's Prince Philip. Britain plunged into silence. 1இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியட்டுள்ள இரங்கல் செய்தியில், அரச குடும்பத்தின் பேரிழப்புக்கு வருந்துவதாகவும், அவர் நாட்டு மக்களுக்கும் ராணுவத்திற்கும் ஆற்றிய சேவை என்றென்றும் நினைவு கூறத்தக்கது என்றும் கூறியுள்ளார். இதேபோன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்டோரும் இளவரசர் பிலிப் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளனர்.