Breaking News

லேபர் கட்சி பிரதம மந்திரி வேட்பாளர் ஆந்தனி அல்பானிஸ், முதியவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் பொருட்டு வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் ஆஸ்திரேலியாவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

Labor's prime ministerial candidate Anthony Albanese has made an election promise that foreign medical personnel will be recruited in Australia to provide proper treatment for the elderly.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல செய்தி நிறுவனத்தின் தலையங்கத்துக்கு லேபர் கட்சி பிரதமர் மந்திரி வேட்பாளர் ஆந்தனி அல்பானிஸ் நேர்காணல் வழங்கியுள்ளார். அதில், முதியவர்களுக்கான மருத்துவ வசதி மேம்படுத்த தனது அரசு பாடுபடும் என்றார். அதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவ பணியாளர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

நேர்காணில் தொடர்ந்து பேசியுள்ள அவர், தற்போது முதியோர் இல்லங்களில் பணியாற்றும் பணியாளர்களில் 80 சதவீதத்தினருக்கு மேற்பட்டவர்கள் பகுதிநேரமாகவே வேலை செய்கின்றனர். துறை சார்ந்த பிரச்னையால் அவர்களுக்கு போதிய வருமானத்துடன் கூடிய வேலை கிடைக்கவில்லை என்று ஆந்தனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

முதியோர் நலனில் அக்கறை காட்டும் மருத்துவ பணியாளர்கள் பலரும் நமகு தேவை. அப்போது தான் அவர்களுடைய வாழ்க்கை இறுதி வரை மரியாதையுடன் இருக்கும் என்று ஆந்தனி அல்பானிஸ் கூறினார். இந்த கருத்துக்கு ஆளும் லிப்ரல் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. முதியவர் நலனில் லேபர் கட்சியின் நிலைபாடு அதிர்ச்சி அளிக்கிறது என லிப்ரல் கட்சி கருத்து கூறியுள்ளது.