Breaking News

மேகதாது அணை கட்ட மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று கர்நாடக முதல்வர் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விரிவான திட்ட அறிக்கையையும் சமர்ப்பித்து இருப்பதாகவும், அந்த அறிக்கையை பரிசீலனை செய்து அணை கட்ட மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மேகதாதுவில் அணை கட்டப்படுவது உறுதி என்றும், அணையை கட்டுவதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழகம் தண்ணீர் விஷயத்தில் எப்போதும் அரசியல் செய்து வருவதாக பசவராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

Karnataka Chief Minister has expressed to confidence that the Central Government will soon give its approval for the construction of the mekedatu Damகாவிரி நதிநீர் விஷயத்திலும் தமிழகம் அரசியல் செய்தது. தற்போது மேகதாது அணை விவகாரத்திலும் தமிழகம் அரசியல் செய்கிறது. இந்த அணை கட்டும் விஷயத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் என்ன கூறினாலும் அதை கேட்க மாட்டோம். அணையை கட்டியே தீருவோம் என்றும் கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லிக்கு சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுவேன். அப்போது அணை கட்டும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பு பற்றியும், இந்த திட்டத்தின் உண்மை நிலையையும் எடுத்து கூறுவேன்.

மேலும் இந்த விவகாரத்தில் சட்டகுழுவினருடன் ஆலோசனை மேற்கொள்வேன். காவிரி படுகைகளில் உபாிநீரை கர்நாடகம் பயன்படுத்துவது குறித்து நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் சட்ட நடவடிக்கை எடுப்பார். இந்த அணை திட்டம் முழுக்க, முழுக்க விவசாயிகள் நலனுக்கானது. இதில் அரசியல் இல்லை. மேகதாது பல்நோக்கு திட்டம். இதை கர்நாடகா அமல்படுத்தியே தீரும் என்று தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3lNX1w5