Breaking News

JOBKEEPER திட்டத்தில் உள்ள பணியாளர்களின் கட்டணம் குறைப்பு ! மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் !

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வருமான ரீதியாக மக்கள் அனைவரும் பாதிக்கபட்டு இருப்பதால் ,ஊதிய மானியம் வழங்குவதை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என்று கூறி வந்தனர் , ஆனால் மத்திய அரசு jobkeeper-களின் கட்டணத்தை குறைத்து வருகிறது.ஊழியர்களின் வேலை நிரந்தரம் இல்லாததால் , கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் , ஆறு மாதங்களுக்கு முன்பு 86 பில்லியன் டாலர்கள் job keeper package நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேல் முழு நேர தொழிலாளர்களின் இரண்டு வாரத்திற்கான ஊதிய மானியம் 1500 டாலரில் இருந்து 1200 டாலராக குறைக்கப்படுகிறது.
தொற்று நோய் பரவலால் முந்தைய வாரம் 20 மணி நேரத்திற்கும் குறைவாகப் பணியாற்றிய பகுதி நேர ஊழியர்களுக்கு இது 750 டாலர்களாக குறைக்கப்படுகிறது.

பொருளாதாரம் சீரான பிறகு,நிதி நெருக்கடிகளைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் வணிகங்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பொருத்தமாக இருப்பதை உறுதிசெய்யவே JOB KEEPER-இன் கட்டணம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது.Melbourne நகரம் இன்னும் lockdown இல் உள்ளது. மேலும் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலை நிலவுகிறது.ஆகையால் வருமான உதவியை குறைப்பதற்கான நேரம் இதுவல்ல என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.கடந்த வாரம் வேலையற்றோருக்கான 15 நாட்களுக்கு JOBSEEKER ஊதியம் 300 டாலர்களாக குறைக்கப்பட்டது.

JOBKEEPER-கான தகுதி என்னென்ன ?

கிட்டத்தட்ட 3.6 மில்லியன் ஊழியர்கள் மானியத்திலிருந்து பயனடைந்துள்ளனர்.

900,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் கட்டணம் செலுத்த கையெழுத்திட்டுள்ளனர்.ஆனால் தொடர்ந்து ஆதரவைப் பெறுவதற்கு, 28 செப்டம்பர் முதல்,வணிகங்களும் லாபமில்லா அமைப்புகளும், தங்களின் விற்பனை அளவு, சரிவை நோக்கி இருப்பதை நிரூபிக்க வேண்டும்.

சில பகுதி நேரத் தொழிலாளர்கள் தொற்று நோய் பரவலுக்கு முன்பு சம்பாதித்ததை விட இப்பொழுது அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்ற விமர்சனங்களைத் தொடர்ந்து இந்தத் திட்டம் மாறுதல் செய்யப்பட்டது.

30 சதவீத வருமானச் சரிவை நிரூபிக்கும் வணிகங்களே இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

மொத்த வருமானம் ஒரு பில்லியனுக்கும் குறைவாகக் கொண்டுள்ள வணிகங்களுக்கும் இது பொருந்தும்.

இதனிடையே, இதைவிட அதிகமான வருவாய் உள்ள வணிகங்கள் 30 சதவீத சரிவை நிரூபிக்க வேண்டும்.வணிகங்களில் வருவாய் அளவின் தகுதிக்கு ஏற்ப புதிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த திட்டம் வழங்கப்படும்.
இரு வாரங்களுக்கு 300 டாலர் வரை சம்பாதிக்கும் மற்ற பகுதி நேர ஊழியர்களும், அரசின் திட்டத்தின் வழியாக JOBSEEKER நல உதவி பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

கோடிக்கணக்கான ஆஸ்திரேலிய மக்களின் வேலையில்லா திண்டாட்டத்தைத் தவிர்க்கவே JOBSEEKER திட்டம் தொடங்கப்பட்டது.
ஆனால் Melbourne புற நகரில் உள்ள வணிகங்களும் நிறுவனங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளதால்.கட்டணம் செலுத்துவதைத் திரும்பப் பெற வேண்டும் என அரசு கூறுகின்றது.

ஜூலை மாதம் 7.5 சதவீதமாக இருந்த ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் ஆகஸ்டில் 6.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ் நிலையில் கோடிக்கணக்கான ஆஸ்திரேலியர்களின் ஊதியத்தை குறைக்க அரசு கட்டாயப்படுத்துவதாக எதிர் கட்சியினரும் தொழிற்சங்கங்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

ACTU president Michele O’Neil கூறுகையில்,” பல தொழிலாளர்களும் அவர் குடும்பங்களும் அரசின் ஆதரவை நம்பி இருக்கும் பொழுது கட்டணத்தைக் குறைப்பது அரசின் தவறு” என்றார்.இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட TREASURY-இன் மதிப்பீட்டை தொடர்ந்து jobkeeper திட்டத்தை நீட்டிப்பதாக அரசு உறுதியளித்தது.

வணிகம் மற்றும் வேலை புதுப்பித்தலை வளர்ப்பதற்கும், வேலைவாய்ப்பு நல் உறவுகளை பாதுகாப்பதற்கும் jobkeeper கட்டணத் திட்டம் நன்றாக செயல்பட்டது.இந்த திட்டத்தை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்று “TREASURY முடிவு செய்துள்ளது.இந்த வெற்றியின் காரணமாக அரசு மேலும் இரண்டு ஊதிய மானியத் திட்டத்தை அறிவித்தது.இந்த ஊதிய உதவி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும்.

மூன்றாம் கட்ட உதவி ஜனவரி 3 முதல் தொடங்கும்.தகுதிபெற்ற முழு நேர ஊழியர்களுக்கு இரு வாரங்களுக்கு 1000 டாலர்களும், பகுதி நேர ஊழியர்களுக்கு 650 டாலர் வரை கட்டணம் செலுத்தப்படும்.Labor’s Treasury spokesperson Jim Chalmers இந்த திட்டத்தை ஆதரித்தார்.ஆனால் விகிதங்களை குறைப்பது வேலையின்மையை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியர்களை மீண்டும் பணிக்கு அழைத்துச் செல்வதே அரசின் முக்கிய நோக்கம். வேலை வாய்ப்பை கூட்டுவதற்கான திட்டங்கள் அக்டோபர் 6 பட்ஜெட் விவாதத்தில் தெரிவிக்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.