Breaking News

Job Seeker கட்டணம் இரு வாரங்களுக்கு 100 டாலர் குறைக்கப்படும் !

வேலையில்லா ஆஸ்திரேலிய மக்களுக்கு தற்காலிக உதவியாக jobseeker கட்டணங்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை Prime Minister Scott Morrison நீட்டித்துள்ளார்.இதனால் Welfare கட்டணம் இரண்டு வாரங்களுக்கு 150 டாலர்கள் குறைக்கப்படும்.Job Seeker கட்டணம் இரண்டு வாரங்களுக்கு $ 815-ல் இருந்து $715 யாக குறையும்.

Scott Morrison நலஉதவி ஆதரவை நிரந்தரமாக அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, இப்போது நமது கவனம் தொற்று நோய்க்கான நடவடிக்கைகள் மீதே என்றார்.

கொரோனா வைரஸ் supplement ஆரம்பத்தில் இரு வாரங்களுக்கு 550 டாலர்கள் செலுத்தப்பட்டது. செப்டமப்ர் இறுதியில் இருந்து டிசெம்பர் 31 வரை 250 டாலர்களாக குறைக்கப்பட்டது.

ஆனால் இந்த தற்காலிக நலத்திட்டம் Welfare அமைப்புகளுக்கு திருப்தியளிக்கவில்லை.குறைந்த வருமானத்தில் உள்ள மக்களுக்கான வருமான ஆதரவை அரசாங்கம் குறைப்பதை எதிர்த்து அரசாங்க சமூக சேவை கவுன்சில் தலைமை நிர்வாக அதிகாரி Dr Casandra Goldie எச்சரித்தார்.

இது கொடுமையான தவறு.கடினமான வாழ்க்கை வாழ்பவர்களை மேலும் துன்புறுத்தும். பொருளாதாரத்தையும் தாக்கும் என்று Ms Goldie தெரிவித்தார்.தற்காலிக நடவடிக்கைகளுக்கு பதிலாக நிரந்தர வருமான ஆதரவு தேவை இது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வாழ்கையை மேம்படுத்த உதவும்.

கொரோனா வைரஸ் ஊக்கத்தொகை இரு வாரங்களுக்கு 250 டாலராக வைத்திருக்க Labor கட்சி வற்புறுத்துகிறது .மேலும் JobKeeper கட்டண அடிப்படை வீதத்தை நிரந்தரமாக அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக அழைப்பு விடுத்துள்ளனர்.

பொருளாதாரத்தில் இருந்து ஆதரவைத் திரும்ப பெறுவதற்கான நேரம் இதுவல்ல என்று எதிர்கட்சித் தலைவர் Anthony Albanese தெரிவித்தார்.குறைந்த வருமானத்தில் உள்ள மக்களுக்கு நிதி உதவி குறைப்பதை தவிர்க்குமாறு அரசாங்கங்கத்தை கேட்டுக்கொள்வதாக Mission Australia CEO James Toomey தெரிவித்தார்.

விக்டோரியாவை தவிர நாடு முழுவதும் வேலை தேடுபவர்களுக்கான பரஸ்பர கடமை தேவைகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.