Breaking News

கடந்த 16 ஆண்டுகளாக டாஸ்மானியா மாநிலத்தின் லிப்ரல் கட்சியில் இரண்டாம் நிலை தலைமையாக இருந்தவர் ஜெர்மி ராக்லிஃப். தற்போது அம்மாநிலத்தின் முதல்வராக அவர் பதவியேற்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தன்னுடைய குடும்பச் சூழலை காரணம் காட்டி முதல்வராக பதவி வகித்த வந்த பீட்டர் கட்வெயின் பதவி விலகினார். இதனால் துணை முதல்வராக இருந்து வரும் ஜெரி ராக்லிஃப் முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jeremy Rockliff has been the second-in-command of the Liberal Party in Tasmania for the past 16 years. It has been confirmed that he will be the next Chief Minister of the state,மேலும் துணை பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் மைக்கல் ஃபெர்கியூசன் பதவியேற்கவுள்ளார். இதுதொடர்பாக பேசிய ராக்லிஃப், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் லிப்ரல் கட்சியினரால் டாஸ்மானியாவின் 47வது முதல்வராக பதவியேற்கவுள்ளது மகிழ்ச்சியாகவுள்ளது. மாநிலத்தில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பலன்களை கருத்தில் கொண்டு செயல்படுவேன் என்றும் கட்சியின் நலன் மற்றும் விதிகளுக்குட்பட்டு நடப்பேன் என்று தெரிவித்த ராக்லிஃப், அரசின் செயல்பாடுகளுக்கு பொறுப்புள்ளவனாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.

Link Source: https://ab.co/3uwZPld