Breaking News

Jenny Mikakos – ன் ராஜினாமாவை தொடர்ந்து Martin Foley சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்!

விக்டோரியாவின் மனஅழுத்த சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley இப்பொழுது சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் Jenny Mikakos சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றி வந்த நிலையில் இப்பொழுது அந்தப் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இப்பொழுது Martin Foley அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் Jenny Mikakos சனிக்கிழமை காலை கூறியதாவது, விக்டோரியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், இதன் மூலம் பார்லிமென்டில் இருந்தும் விலகுவதாகவும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் தான் ராஜினாமா செய்ததற்கான காரணத்தையும் கூறிய Jenny Mikakos , கொரானாவுக்கு எதிரான போரில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கு அதை பாதியிலேயே விட்டுவிட்டு போவதை ஒருநாளும் நினைத்துக்கூட பார்த்ததில்லை, பிரதமரின் சமீபத்திய அறிக்கையை நான் கடுமையாக எதிர்க்கிறேன், இதனால் விக்டோரியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியில் என்னால் தொடர்ந்து செயலாற்ற முடியாது என நம்புகிறேன். எனக் கூறியிருந்தார்.

இவ்வாறு Jenny Mikakos யின் திடீர் ராஜினாமாவை பற்றி கேள்விபட்ட பலரும் அதிர்ச்சியான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் கூறியதாவது botched hotel லில் கடந்த வாரம் கோரன்டைன் ப்ரோக்ராமுக்கு Jenny Mikakos தான் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

மேலும் பிரைவேட் செக்யூரிட்டி கார்டுகளை பயன்படுத்திய விவகாரத்தில் பல்வேறு அடுத்தகட்ட விசாரணைகள் நடந்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் டிபன்ஸ் போர்ஸ் அல்லது போலீஸ் ளை பயன்படுத்தாமல் பிரைவேட் செக்யூரிட்டி கார்டுகளை பயன்படுத்த இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது அதுவும் 14 நாட்கள் கோரன்டைன் இல்லாமல்.

இதை பார்த்த Jenny Mikakos தன்னுடைய நேர்மையை சிதைக்கும் வகையில் வெளியாகியிருக்கும் இந்த ஸ்டேட்மெண்ட்
தனக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இப்பொழுது புதிதாக சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள Martin Foley, விக்டோரியாவின் அரசுக்கு கீழ் பணியாற்றுவது தான் மிகவும் பெருமையாக நினைப்பதாகவும், எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் சிறப்பாக பணியாற்றி விக்டோரியாவை கொரானா பாதிப்பிலிருந்து மிக விரைவில் மீட்டெடுப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதுபற்றி NSW சுகாதாரத்துறை அமைச்சர் Hazzard கேள்வி எழுப்புகையில் எவ்வாறு ஒரு மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் எந்த ஒரு ஒப்புதலும் இன்றி நேரடியாக போலீசை இதுபோன்ற பாதுகாப்பற்ற பணிகளுக்குப் பயன்படுத்தலாம் எனது ட்விட்டர் மூலம் விக்டோரியாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் Jenny Mikakos வை சரமாரியாக கேள்விகளால் துளைத்துள்ளார்.

இருப்பினும் Jenny Mikakos-ன் ராஜினாமா தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், கொரானாவுடன் போராடிய போரில் Jenny Mikakos ஓய்வில்லாமல் பணியாற்றியுள்ளார். இவ்வாறு Hazzard கூறியுள்ளார்.