Breaking News

ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் நாட்டினர் வந்து குடியேறிய ஜனவரி 26-ம் தேதி ஆஸ்திரேலியா நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் ஆஸ்திரேலியா நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு, வானவேடிக்கை, ஆட்டம், பாட்டம் குதூகலத்துடன் நிறைவுபெற்றது.

January 26 is celebrated as Australia Day by the British immigrants to Australia. Australia Day was also celebrated with much fanfare, with fireworks, dancing and bottom cheering.

கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியா நாள் கொண்டாடப்படவில்லை. அதன்படி இந்தாண்டில் புதியதாக 16 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஓமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள போதிலும், ஆஸ்திரேலியா நாள் கொண்டாட்டம் நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டன.

கன்னபிராவில் நடந்த நிகழ்வில் பிரதமர் ஸ்காட் மோரீசன், புதியதாக குடியுரிமை பெற்றவர்களுக்கு வரவேற்புரை அளித்தார். அதில், பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசிய அவர், ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கு இருந்து வரும் உரிமைகள், வாய்ப்புகள், சலுகைகள் மற்றும் பொறுப்புகள் இனி உங்களுக்கும் கிடைக்கும். எங்களுடைய வரலாறு மற்றும் பகிரப்பட்ட எதிர்காலத்தின் வாக்குறுதி உங்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Link Source: https://ab.co/35utth5